வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024
வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024

HomeFact Check3000 ஆண்டுகள் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

3000 ஆண்டுகள் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: 3000 ஆண்டுகள் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை

Fact: வைரலாகும் வீடியோவில் உள்ள சிலை ஷிவ் நாராயண் ஜூவல்லரியால் செய்யப்பட்டதாகும்.

3000 ஆண்டுகள் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை என்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

7800 கிலோ தூய தங்கம், 780,000 வைரங்கள் மற்றும் 780 காரட்களால் வைரத்தால் செய்யப்பட்ட சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை. இதன் இன்றய மதிப்பு பல ஆயிரம் லட்சம் கோடிகள் எனவும் இதனை விலை மதிப்பீடு செய்ய முடியலை என ஸதபதிகள் மற்றும் நவீன வல்லுனர்கள் சொன்னார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

பிரான்சில் இருந்து வரவழைக்கப்பட்ட வல்லுனர் குழு பிரமித்து போய் கணக்கிடமுடியாது திரும்பி சென்றனர் என்பது அறிந்ததே.இதை தரிசிக்க, கண்களால் காணவே பெரும் பாக்கியம் பண்ணியிருக்கவேண்டும்.நேரில் செல்ல முடியாதவர் இந்த காணொளிம மூலம் தரிசித்து பலன் பெறலாம்.எப்படி நாங்டள் சுவாமியை, கடவுளை நேரில் காணமுடியாத போது ஒரு படத்தையோ, விக்கிரகத்தையோ வைத்து வழிபடுவது போலத்தான் இதுவும்.” என்று இந்த வீடியோ பரவுகிறது.

Screenshot from X @kaippulla123

X Link/Archived Link

Screenshot from X @NaMo_Bharathan

X Link/Archived Link

Screenshot from X @vaijanakai

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.    

Also Read: ராமாயணம் திரைப்படத்தில் நடித்து வருவதால் நடிகை சாய்பல்லவி அசைவ உணவு உண்பதில்லையா?

Fact Check/Verification

3000 ஆண்டுகள் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து தேடியபோது கடந்த ஆகஸ்டு 06, 2023 அன்று கார்த்திக் நாகராஜ் என்பவர் வெளியிட்டிருந்த இந்த வீடியோ நமக்குக் கிடைத்தது. தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ” இந்த ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி சிலை 8 அங்குல உயரமும் 18 அங்குல நீளமும் கொண்டது. 32 பேர் 2 மாதங்களாக தினமும் 16 மணி நேரம் உழைத்து உருவாக்கிய இந்த அற்புதமான வடிவமைப்பு 2.8 கிலோ எடை கொண்டது. கிட்டதட்ட 75,000 உயர்தர வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட, வியக்க வைக்கும் 500 காரட் மதிப்புடைய இந்த ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி சிலை பார்க்க தெவிட்டாத காட்சியைத் தரக்கூடியது.

ஒவ்வொரு வைரமும் மெருகூட்டப்பட்டு திறமையாக அமைக்கப்பட்டுள்ளது.இச்சிலையில் சிறப்பான ஜாம்பியன் மரகதங்கள் மற்றும் இயற்கையான பர்மிய மாணிக்கங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அவை இச்சிலைக்கு தெய்வீக நேர்த்தியை  உருவாக்கி கண்கவர் தோற்றத்தை உருவாக்குகின்றன. இந்த வியக்கவைக்கும் உருவாக்கமான ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி சிலை கின்னஸ் சாதனை படைக்க உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Instagram will load in the frontend.

தொடர்ந்து, இதுகுறித்து கீவேர்டுகளால் தேடியபோது ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷிவ் நாராயண் ஜூவல்லரி கேரளா பீமா ஜுவல்லரி சேர்மன் பி.கோவிந்தனை கெளரவிக்கும் வகையிலான இந்த சிலையை செய்துள்ளது என்பதும், IIJS 2023 அதாவது கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற India International Jewellery Show-வில் இச்சிலை காட்சிக்கு வைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இது என்பதும் நமக்குத் தெரிய வந்தது.  இதுகுறித்த வீடியோ, ஷிவ் நாராயண் ஜூவல்லரி சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியாகியுள்ளது.

மேலும், வைரலாகும் சிலை Iijs 2023ல் காட்சிப்படுத்தப்பட்ட அதே பின்புற வடிவமைப்புடன் கூடிய காட்சியானது ஷிவ் நாராயண் ஜூவல்லரியின் நிர்வாக இயக்குனர் துஷார் அகர்வால் அளித்துள்ள பேட்டிகளில் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோவே தற்போது 3000 ஆண்டுகள் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை என்று வைரலாகிறது. இதுகுறித்த மேலும் செய்திகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே காணுங்கள்.

Also Read: இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இஸ்லாமியரை இந்து பெண்கள் அடித்து நொறுக்கினரா?

Conclusion

3000 ஆண்டுகள் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Instagram post from Karthik Nagraj, Dated August 06, 2023
YouTube Video from The Diamond Talk by Renu Choudhary, Dated August 10, 2023
Instagram post from shivnarayanjewellers, Dated August 04, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular