Fact Check
பணம் கொடுத்து விவசாயிகள் போரட்டத்திற்கு ஆள் சேர்ப்பதாக பரவும் தவறான வீடியோ!
Claim: பணம் கொடுத்து விவசாயிகள் போரட்டத்திற்கு ஆள் சேர்ப்பதாக பரவும் வீடியோ!
Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு ஜனவரி மாதத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு முன்பு நடந்ததாகும்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் நிலையில், “பஞ்சாப் டில்லி பார்டரில் அமர்ந்து தர்ணா செய்ய மாத சம்பளத்தை புரோக்கர்கள் ரூ35000 பேச, விவசாயி ரூ.40,000 கேட்க… உனக்கு இங்கு சாப்பாடு, தண்ணி,வசதி தருவோம் அங்கு உன் வயலில் ஆட்கள் வேலை செய்வர். ஏன் எதற்கு ரூ.40,000 என விவாதம். புரோக்கர் விவசாயி கழுத்தை பிடிக்கிறான்… இது என்ன ?” என்று குறிப்பிட்டு வீடியோஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

