சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkவிவசாயிகள் போராட்டக்களத்தில் கோயில்கள் மீது தாக்குதல் நடத்துவதாகப் பரவும் தவறான வீடியோ செய்தி!

விவசாயிகள் போராட்டக்களத்தில் கோயில்கள் மீது தாக்குதல் நடத்துவதாகப் பரவும் தவறான வீடியோ செய்தி!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: விவசாயிகள் போராட்டம் என்று பொய்யாக அரசியல்வாதிகளால் கட்டமைக்கப்பட்ட கூட்டம் செய்யும் செயலை பாருங்கள்
Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு காலிஸ்தானி-சிவசேனாவிற்கு இடையிலான சண்டையின்போது எடுக்கப்பட்டதாகும்.

விவசாயிகள் போராட்டக்களத்தில் கோயில்கள் மீது தாக்குதல் நடத்துவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“விவசாயிகள் போராட்டம் என்று பொய்யாக அரசியல்வாதிகளால் கட்டமைக்கப்பட்ட கூட்டம் செய்யும் செயலை பாருங்கள் மக்களே.இவர்கள் விவசாயிகள் என்று நம்ப வேண்டுமாம்” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

விவசாயிகள்
Screenshot from X @Narasim18037507

Archived Link

Screenshot from X @kaippulla123

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

 Also Read: பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாது என்றாரா அண்ணாமலை?

Fact Check/Verification

விவசாயிகள் போராட்டக்களத்தில் கோயில்கள் மீது தாக்குதல் நடத்துவதாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதன் முடிவில், வைரலாகும் வீடியோ தற்போதையது அல்ல; கடந்த ஏப்ரல் 30, 2022 அன்று Republic World என்கிற யூடியூப் பக்கத்தில் “காலிஸ்தானி – சிவசேனா மோதலில் கோயில் மீது தாக்குதல்” என்று இந்த வீடியோ பதிவாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 30,2022 அன்று வெளியாகிய செய்திகளிலும் ”Curfew in Patiala, violence breaks out over ‘anti-Khalistan’ march” என்று இந்த செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்த உண்மையறியும் சோதனையை நாம் ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளோம். இந்த வீடியோவே தற்போது விவசாயிகள் கோயில்களின் மீது தாக்குதல் நடத்துவதாகப் பரவி வருகிறது என்பது நமக்கு உறுதியாகியது.

Also Read: விஜயகாந்த் படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தியதாக பரவும் எடிட் படம்!

Conclusion

விவசாயிகள் போராட்டக்களத்தில் கோயில்கள் மீது தாக்குதல் நடத்துவதாகப் பரவும் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Report from Indian Express, Dated April 30, 2022
YouTube Video from Republic World, Dated April 30, 2022



(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular