Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்ஸி அணிந்து காசர்கோடு முஸ்லீம் லீக் அலுவலகம் திறக்கப்பட்டது.
Fact: வைரலாகும் வீடியோவில் காணப்பட்டவர்கள் அணிந்திருந்த ஜெர்ஸியும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியும் வெவ்வேறானதாகும்.
“ராகுல் காந்தி தொகுதியில் கேரளாவில் பாகிஸ்தானின் கிரிக்கெட் ஜெர்சி அணிந்து கேரளா காசர்கோடு லீக் அலுவலகம் திறப்பு. நாளை நாட்டில் ஒரு எதிர்பாராத சம்பவம் என்றால் இவர்கள் யாருக்கு துணையாக இருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள் என்ன கொடுமை” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: குற்றால அருவில் மலைப்பாம்புகள் மீனுக்காக சண்டையிட்டதாக பரவும் தவறான வீடியோ!
பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்ஸி அணிந்து காசர்கோடு முஸ்லீம் லீக் அலுவலகம் திறக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவலில் ராகுல் காந்தியின் தொகுதி காசர்கோடு என்று பரப்பப்படுகின்றது. இது தவறானத் தகவலாகும். உண்மையில் கேரளாவின் வயநாடு தொகுதியிலேயே ராகுல் காந்தி போட்டியிட்டு வென்றார்; காசர்கோடில் அல்ல. காசர்கோடில் காங்கிரஸை சார்ந்த ராஜ்மோகன் உன்னித்தான் என்பவரே பாராளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்ஸி அணிந்து காசர்கோடு முஸ்லீம் லீக் அலுவலகம் பரவும் வீடியோவை உற்று நோக்குகையில், அவ்வீடியோவில் காணப்படுபவர்கள்வர்கள் அணிந்திருக்கும் பச்சை ஜெர்ஸியில் ‘ஆரங்காடி’ என்று எழுதப்பட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து இதை அடிப்படையாக வைத்து தேடியதில் manishh_bhatt என்கிற பயனர் ஐடியை கொண்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காசர்கோடு ஆரங்காடி பகுதியில் முஸ்லீம் லீம் அலுவலகத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.
இதனையடுத்து தேடியதில் ‘பச்சப்படா (பச்சை படை) ஆரங்காடி’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் வீடியோவை ஒத்த மற்றொரு வீடியோ பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து அப்பக்கத்தை ஆராய்கையில் கேரளா காசர்கோடில் உள்ள ஆராங்காடு பகுதியில் முஸ்லீம் லீக் கட்சிக்கென்று புதிய கட்டிடம் திறக்கப்பட்டது என்றும், அது தொடர்பான கொண்டாட்ட வீடியோவே வைரலாகியுள்ளது என்றும் அறிய முடிந்தது.
அப்பக்கத்தில் தொடர்ந்து தேடியதில் இக்கொண்டாட்டம் தொடர்பாக பல வீடியோக்கள் பதிவிடப்பட்டிருந்தை காண முடிந்தது. அவ்வீடியோக்களில் ஒன்றாக சிறுவர்கள், இளைஞர்களென பலர் பச்சை நிற ஜெர்ஸி அணிந்து ஊர்வலம் வருவதை காண முடிந்தது.

அவ்வீடியோவை ஆய்வு செய்கையில் அந்த ஜெர்ஸியின் பின்பக்கத்தில் பச்சப்படா (பச்சை படை) ஆரங்காடி என்று மலையாளத்தில் எழுதப்பட்டிருந்ததை காண முடிந்தது. அதேபோல் முன்பகுதியில் ஆரங்காடி என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. இதுத்தவிர்த்து முன்புற வலது பக்கத்தில் முஸ்லீம் லீக்கின் அடையாளச் சின்னம் இடம்பெற்றிருந்தது. வலது கை பகுதியில் IUML என்றும், இடது கை பகுதியில் MYL என்றும் எழுதப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.





தொடர்ந்து தேடுகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்ஸி அணிந்து வீரர்கள் நிற்கும் புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.
அப்படத்தில் பாகிஸ்தான் வீரர்கள் அணிந்திருந்த ஜெர்ஸியின் முன்புறத்தில் பாகிஸ்தான் என்று எழுதப்பட்டிருந்தது. இதுத்தவிர்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் அடையாளச் சின்னம், 2024 டி20 உலகக்கோப்பையின் அடையாளச் சின்னம் உள்ளிட்டைவையும் அதில் இடம்பெற்றிருந்தது.

இந்த ஜெர்ஸியானது முஸ்லீம் கட்சியினர் அணிந்திருந்த ஜெர்ஸியிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளதை நம்மால் அறிய முடிகின்றது.
Also Read: நேரு மவுண்ட்பேட்டன் மனைவி எட்வினாவுடன் இருப்பதாக பரவும் தவறானப் படம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்ஸி அணிந்து காசர்கோடு முஸ்லீம் லீக் அலுவலகம் திறக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் வீடியோவில் காணப்பட்டவர்கள் அணிந்திருந்த ஜெர்ஸியும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியும் வெவ்வேறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
PCB website
Facebook Post by Pachapada Arangadi on June 28, 2024
Facebook Post by Pachapada Arangadi on June 28, 2024
இத்தகவல் தவறானது என்று நியூஸ்செக்கர் மலையாளயத்தில் ஏற்கனவே செய்தி வெளிவந்துள்ளது. சப்லூ தாமஸ் அக்கட்டுரையை எழுதி இருந்தார்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
October 27, 2025
Ramkumar Kaliamurthy
October 28, 2023
Ramkumar Kaliamurthy
October 9, 2025