திங்கட்கிழமை, மே 23, 2022
திங்கட்கிழமை, மே 23, 2022

HomeFact Checkபெட்ரோல் விலை உயராது என்றாரா அண்ணாமலை?

பெட்ரோல் விலை உயராது என்றாரா அண்ணாமலை?

பெட்ரோல் விலை உயராது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பெட்ரோல் விலை உயராது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் நியூஸ்கார்ட்

“தேர்தல் முடிந்தால் பெட்ரோல் விலை உயரும் என்ற பயம் அவசியமற்றது. இனி பெட்ரோல் விலை உயர்ந்தால் எங்களை செருப்பால் கூட அடியுங்கள்“ என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

பெட்ரோல் விலை உயராது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் நியூஸ்கார்ட் - 1

Facebook Link

பெட்ரோல் விலை உயராது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

பெட்ரோல் விலை உயராது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

Also Read: விசிக தலைவர் திருமாவளவனிடம் சால்வையை வாங்கி கீழே வைத்தாரா முதல்வர் ஸ்டாலின்?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

பெட்ரோல் விலை உயராது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், இந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் நியூஸ் 7 தமிழ் வைரலாகும் நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. மாறாக இந்த நியூஸ்கார்ட் பொய்யானது என்று நியூஸ் 7 தமிழ்  சார்பில் வெளியிடப்பட்டிருந்த மறுப்பு பதிவையே காண முடிந்தது.

Archive Link

இதனைத் தொடர்ந்து தேடியதில்  தமிழக பாஜகவின் சமூக ஊடக அணி தலைவர் நிர்மல் குமாரும் வைரலாகும் இத்தகவல் பொய்யானது என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

Archive Link

Also Read: 200 வயதான இமயமலை துறவி; வைரலாகும் தகவல் உண்மையானதா?

Conclusion

நமது விரிவான ஆய்வுக்குப்பின், பெட்ரோல் விலை உயராது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது தெளிவாகின்றது.

இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Fabricated

Sources

News 7 Tamil’s tweet on 07th March
CTR NirmalKumar’s tweet on 07th March


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular