விசிக தலைவர் திருமாவளவனிடம் சால்வையை வாங்கி முதல்வர் ஸ்டாலின் கீழே வைத்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, ஆளும் திமுக கூட்டணியில் இணைந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், அக்கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திந்து வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில், குறிப்பிட்ட நிகழ்வில் திருமாவளவன் கொடுத்த சால்வையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலட்சியப்படுத்தியதாக வீடியோ ஒன்று, “அவ்வளவுதான் போல…” என்று வைரலாகிறது. பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல் குமாரும் இதனை பகிர்ந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவி ஒருவர் பேசியதாகப் பரவுகின்ற புகைப்படச் செய்தி உண்மையா?
Fact Check/Verification
விசிக தலைவர் திருமாவளவனிடம் சால்வையை வாங்கி கீழே வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
நிர்மல் குமார் ஷேர் செய்திருந்த வீடியோவில் சிறு பகுதி விடுப்பட்டிருப்பது போன்று இருந்ததால் குறிப்பிட்ட வீடியோ நிகழ்வின் முழு பகுதியையும் தேடினோம்.
அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்காக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை திருமாவளவன் தலைமையில் வெற்றி வேட்பாளர்கள் சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ அது என்பது நமக்கு உறுதியானது.
தொடர்ந்து Mobile Journalist என்கிற செய்தி ஊடகப் பக்கம் வெளியிட்டுருந்த குறிப்பிட்ட நிகழ்வின் முழு வீடியோவும் நமக்குக் கிடைத்தது. அதில், மஞ்சள் நிற சால்வையை முதல்வருக்கு திருமாவளவன் அணிவிக்கிறார். அதனை மு.க.ஸ்டாலினும் ஏற்றுக் கொள்கிறார். தொடர்ந்து மற்றொரு விசிக வெற்றியாளர் அளித்த சால்வையையே கையில் வாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்திற்காக அதனை அருகில் இருந்த டேபிளில் வைப்பதும் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திருமாவளவன் இருவரும் கைகளைப் பிடித்துக் கொண்டே சில நிமிடங்கள் தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருப்பதும் பதிவாகியுள்ளது.
மேலும், குறிப்பிட்ட நிகழ்வு தொடர்பான புகைப்படங்களை விசிக தலைவர் திருமாவளவன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
Conclusion
விசிக தலைவர் திருமாவளவனிடம் சால்வையை வாங்கி கீழே வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதாகப் பரவுகின்ற வீடியோ தகவல் தவறானது; எடிட் செய்யப்பட்ட சிறு பகுதியே பரப்பப்படுகிறது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Manipulated Media
Our Sources
Mobile Journalist
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)