வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Check200 வயதான இமயமலை துறவி; வைரலாகும் தகவல் உண்மையானதா?

200 வயதான இமயமலை துறவி; வைரலாகும் தகவல் உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

200 வயதான இமயமலை துறவி என்று கூறி துறவி ஒருவரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Archive Link

உலக சுகாதாரத் துறையின் அறிக்கைப்படி மனிதனின் சராசரி வாழ்நாள் 73 வருடங்களாகும். ஆனால் அவ்வப்போது சிலர் 100 வருடங்களைத் தாண்டி வாழ்வதை நாம் செய்திகளில் பார்த்திருப்போம். சமீபத்தில் கூட வாரணாசியைச் சேந்த 125 வயதான சுவாமி சிவானந்தா என்பவர் பத்மஸ்ரீ விருதுக்கு  மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த வரிசையில் தற்போது  இமயமலை துறவி ஒருவர் 200 வயதில் உயிருடன் இருப்பதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

200 வயதான இமயமலை துறவி என்று வைரலாகும் தகவல்

Facebook Link

200 வயதான இமயமலை துறவி என்று வைரலாகும் தகவல் - 1

Facebook Link

Also Read: ஏடிஎம் பின்னை தலைகீழாக அழுத்தினால் காவல்துறையினருக்கு எச்சரிக்கை போகுமா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

இமயமலை துறவி ஒருவர் 200 வயதில் உயிருடன் இருப்பதாக கூறி வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுகுறித்து தேடினோம். இத்தேடலில் இந்த வீடியோவானது தமிழ் தவிர்த்து இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பரவி வருவதை நம்மால் அறிய முடிந்தது. நியூஸ்செக்கரின் இந்தி பிரிவினர் ஏற்கனவே இந்த வீடியோ குறித்து ஆய்வு செய்து வைரலாகும் இத்தகவல் தவறானது என்று உறுதி செய்துள்ளனர். அதை படிக்க இங்கே படிக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த வீடியோவை டிக்டாக்கில்  Name’s Auyary KH எனும் பயனர் ஐடியை உடையவர் பதிவேற்றம் செய்துள்ளார். இவர் இந்த வீடியோவைத் தவிர்த்து இந்த துறவி குறித்து மேலும் பல வீடியோக்களையும் பதிவேற்றம் செய்துள்ளார்.

वीडियो में दिख रहे साधु की उम्र 200 वर्ष है.
Screenshot of Ayuary’s TikTok page

அவ்யாரியின் டிக்டாக் பக்கத்தின் வாயிலாக நமக்கு தெரிய வந்தது என்னவென்றால் வைரலாகும் வீடியோவில் இருக்கும் முதியவரின் பெயர் லூவாங் போ யாய் என்கிற லூவாங் தா என்பதாகும்.

TikTok video shared by Auyary
TikTok video shared by Auyary

இதனைத் தொடந்து அவ்யாரியின் ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தோம். இதில் அவ்யாரி இத்துறவி குறித்த பல செய்திகளை பகிர்ந்திருந்ததை காண முடிந்தது. அச்செய்திகளில் லூவாங் போ யாய் என்கிற லூவாங் தாவின் வயது 109 என குறிப்பிடப்பட்டிருந்தது.

Screenshot of Auyary's Facebook page
Screenshot of Auyary’s Facebook page

அவ்யாரி காசோடு ஆன்லைன் எனும் ஆன்லைன் ஊடகத்தில் வெளிவந்திருந்த செய்தி ஒன்றையும் பகிர்ந்திருந்தார். அந்த செய்தியில் லூவாங் தாவுக்கு 109 வயதென்றும், தாய்லாந்தின் நாக்கோன் ராட்சசிமா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

an article published by Khaosod Online
an article published by Khaosod Online

Also Read: உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை என் தோளிலா கொண்டு வர முடியும் என்றாரா நிர்மலா சீதாராமன்?

Conclusion

நம் விரிவான ஆய்வின் மூலம் தெளிவாகுவது என்னவென்றால் வைரலாகும் வீடியோவில் காணப்படும் துறவிக்கு 109 வயதே ஆகின்றது, 200 அல்ல. அதேபோல் அத்துறவி உண்மையில் தாய்லாந்தைச் சார்ந்தவராவார், இமயமலையச் சார்ந்தவரில்லை.

இமயமலை துறவி ஒருவர் 200 வயதில் உயிருடன் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

Result: Misleading/Partly False


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular