Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: புகாரளிக்க வந்த மூதாட்டியை தரக்குறைவாக பேசி தள்ளி விட்ட போலீசார்.
Fact: இச்சம்பவம் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்ததாகும். சம்பவத்தில் தொடர்புடைய காவலர் யுவராஜ் அப்போதே பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த மூதாட்டியை காவலர் ஒருவர் தரக்குறைவாக பேசி தள்ளிவிட்டதாக கூறி @vickybala_offl என்கிற பயனர் ஐடியை கொண்ட எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்று கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 03, 2025) பகிரப்பட்டுள்ளது. இவ்வீடியோவை இதுவரை ஒரு லட்சத்து பதினைந்தாயிரம் பேர் பாவையிட்டுள்ளனர். 2900 பேர் லைக் செய்துள்ளனர்.
இவரை போலவே பலரும் இவ்வவீடியோவை பகிர்ந்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: “திமுக உபி வரான்! பயமா இருக்கு அண்ணா!!” என்று குறிப்பிட்டு விகடன் அட்டைப்படம் வெளியிட்டதா?
புகாரளிக்க வந்த மூதாட்டியை தரக்குறைவாக பேசி போலீசார் ஒருவர் தள்ளி விட்டதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து இவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் ஏறக்குறைய 2 வருடங்களுக்கு முன்பு பிப்ரவரி 14, 2023 அன்று புதிய தலைமுறை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் இவ்வீடியோவை பகிர்ந்திருந்ததை காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் ஈடிவி பாரத் இணைய ஊடகத்திலும் பிப்ரவரி 15, 2023 அன்று இச்சம்பவம் குறித்த செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
இச்செய்தியில் கணவனையும் மகன்களையும் இழந்த 80 வயது மூதாட்டி அய்யம்மாள் மருமகள்களும் பேரப்பிள்ளைகளும் தன்னை சரிவர கவனிப்பதில்லை என்று அவ்வப்போது காவல்நிலையத்தில் புகார்கள் அளிக்க வந்ததாகவும், காவலர்கள் அவரின் புகாரை வாங்காமல் சமாளித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த தினத்தில் மூதாட்டி அய்யம்மாளை இரண்டாம் நிலை காவலர் யுவராஜ் தரக்குறைவாக பேசி, காவல் நிலையத்தை விட்டு வெளியேறுமாறு தள்ளிவிட்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தேடுகையில் மூதாட்டியிடம் தரக்குறைவாக நடந்துக்கொண்ட காவலர் யுவராஜை காவல் கண்காணிப்பாளர் கலைச்செலவன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் என சமயம் தமிழ் பிப்ரவரி 16, 2023 அன்று வெளியிட்ட செய்தி மூலம் அறிய முடிந்தது.
வேறு சில ஊடகங்களும் காவலர் யுவராஜ் இடைநீக்கம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அவற்றை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
Also Read: சொந்த தங்கையை திருமணம் செய்த அண்ணன் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
புகாரளிக்க வந்த மூதாட்டியை தரக்குறைவாக பேசி போலீசார் ஒருவர் தள்ளி விட்டதாக பரவும் சம்பவம் தற்போது நடந்ததல்ல. இச்சம்பவம் ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு முன்பு 2013 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்ததாகும். இச்சம்பவத்தில் தொடர்புடைய காவலதிகாரியும் அச்சமயத்திலேயே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Instagram post by Puthiya Thlaimurai, Dated February 14, 2023
Report by ETV Bharat, Dated February 15, 2023
Report by Samayam Tamil, Dated February 16, 2023
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்
Ramkumar Kaliamurthy
May 2, 2023
Ramkumar Kaliamurthy
May 5, 2021
Ramkumar Kaliamurthy
October 6, 2021