Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
தமிழகத்தில் மீண்டும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு
வைரலாகும் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான செய்தியாகும்.
தமிழகத்தில் மீண்டும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”இதை விட கேவலமான அரசியல் எங்கே இருக்க முடியும், முருகர்மாநாடை எப்பாடு பட்டாவது நடக்க விடக்கூடாது, இவளோ கூட்டம் சேர்ந்துட்டா பிஜேபி உள்ளே வந்திடும்…கழகம் நாசமாக போகும் காலம் நெருங்குகிறது..அதன் அறிகுறிகள் தான் இவை
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஒன்று சேருவோம்…கழகத்தை துரத்துவோம்” என்று இந்த வீடியோ பரவுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக ஆட்சியில் சமீபத்தில் நடைபெற்ற சாதிய வன்கொடுமை என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
தமிழகத்தில் மீண்டும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அது கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான செய்தி என்பது நமக்கு உறுதியாகியது. மேலும், செய்திகளிலோ, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தரப்பிலோ இவ்வாறு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதும் உறுதியாகியது.
கடந்த ஜனவரி 05, 2022 அன்று சத்தியம் டிவியில் “தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு” என்னும் செய்தி வெளியாகியிருந்தது.
அந்த வீடியோவை எடுத்தே முருகர் மாநாட்டை தடுக்கும் வகையில் ஞாயிறு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகப் பரவி வருகிறது.
Also Read: செப்டம்பர் 1 முதல் 500 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் கிடைக்காது என்றதா ரிசர்வ் வங்கி?
தமிழகத்தில் மீண்டும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என்று பரவும் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video From, Sathyam TV, Dated January 05, 2022
X page of Ma. Subramanian, Minister for Medical and Family Welfare
Ramkumar Kaliamurthy
January 7, 2025
Ramkumar Kaliamurthy
May 2, 2023
Ramkumar Kaliamurthy
June 15, 2022