Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Politics
பாஜகவின் மூத்த அரசியல் தலைவர் ஹெச்.ராஜா அவர்கள் பெட்ரோல் விலையைக் குறைத்து வாக்கு வாங்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்று கூறியதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் காரணமாக தமிழகமே விழாக் கோலம் பூண்டுள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை பெற வேண்டும் என்று ஒவ்வொரு கட்சியும் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து வருகின்றன.
பாஜகவும் இம்முறை எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்று கடினமாக உழைத்து வருகின்றது. “வேல் யாத்திரை” போன்ற பேரணிகளை செய்வது, மோடி, அமித்ஷா போன்ற தேசிய தலைவர்களை வரவழைத்து பொதுக் கூட்டங்கள் நடத்துவது என பல விஷயங்களை செய்து வருகின்றது.
ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம், கேஸ் விலையேற்றம் போன்றவை பாஜகவுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.
மாற்று கட்சிகள் பாஜகவை வீழ்த்த இந்த விலையேற்றங்களை மிகப்பெரிய ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். சாதாரண மக்களும் இந்த விலையேற்றங்களால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில்தான் ஹெச்.ராஜா அவர்கள் “பெட்ரோல் விலையைக் குறைத்து வாக்கு வாங்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை” என்று கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது.
Archive Link: https://archive.vn/SAVCU
Archive Link:https://archive.vn/sl84Q
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த புகைப்படச் செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
ஹெச்.ராஜா குறித்து வைரலாகும் இந்த புகைப்படச் செய்தியின் உண்மைத்தன்மை குறித்து அறிய, இப்புகைப்படச் செய்தியை கூகுள் ரிவர்ஸ் சர்ச் முறைப்படி ஆய்வு செய்தோம். இவ்வாறு செய்ததில் வைரலாகும் இப்புகைப்படச் செய்தி போலியான ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹெச்.ராஜா அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பெட்ரோல் விலையுயர்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது காங்கிரஸ் ஆட்சியை விட குறைவுதான் என பதிலளித்தார். இந்த தகவல் புதிய தலைமுறை உள்ளிட்ட ஊடகங்களில் செய்தியாக வெளிவந்திருந்தது.
புதிய தலைமுறையில் வெளிவந்த இந்த புகைப்படச் செய்தியே எடிட் செய்யப்பட்டு, “பெட்ரோல் விலையைக் குறைத்து வாக்கு வாங்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை” என்றுஹெச்.ராஜா அவர்கள் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானப் புகைப்படச் செய்தியையும், எடிட் செய்யப்பட்டப் புகைப்படச் செய்தியையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
பெட்ரோல் விலையைக் குறைத்து வாக்கு வாங்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்று ஹெச்.ராஜா அவர்கள் கூறியதாக பரவிய புகைப்படச் செய்தி போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Facebook Profile: https://www.facebook.com/permalink.php?story_fbid=1407359799625306&id=100010538971663
Facebook Profile: https://www.facebook.com/permalink.php?story_fbid=1098503230671674&id=100015360224962
Puthiya Thalaimurai: https://twitter.com/PTTVOnlineNews/status/1363082143912574980
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
March 25, 2025
Ramkumar Kaliamurthy
March 25, 2025
Ramkumar Kaliamurthy
January 31, 2025