Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Politics
மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் மறைந்த மூத்த அரசியல்வாதியான கருணாநிதி அவர்களை சக்கர நாற்காலியோடு தொடர்புப் படுத்தி விமர்சித்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை (21/02/2021) அன்று மக்கள் நீதி மய்யத்தின் நான்காம் ஆண்டு தொடக்க விழா வைக் கொண்டாடும் விதமாக ஆலோசனைக் கூட்டம் ஒன்று சென்னையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் கமல்ஹாசன் அவர்கள் பேசும்போது,
“மக்களுக்கு வேலை செய்யத் தேவைப்படும் ஆட்சி அதிகாரத்தை நாம் பெற வேண்டும். அந்த அதிகாரத்தை ஐந்து ஆண்டிற்குள் பெற வேண்டும். அதற்குரிய ஆலோசனைகளைக் கூறுங்கள்.
ஆட்சி அதிகாரத்தை பெற்றப்பின் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நான் மக்களுக்காக வேலை செய்வேன். அதன்பின் நான் அரசியலில் பங்கு பெற மாட்டேன். சக்கர நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டு மக்களுக்கு தொல்லைத் தர மாட்டேன்.”
என்று பேசினார்.
இதில் சக்கர நாற்காலி என்ற சொல்லை கருணாநிதி அவர்களை மனதில் கொண்டே கமல்ஹாசன் பயன்படுத்தியுள்ளார் என்று கூறி சமூக வலைத்தளங்களில் இது மிகப்பெரிய பேசுப்பொருளாக மாறியுள்ளது.
கருணாநிதி அவர்களின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் #மன்னிப்புகேள்_கமல் எனும் ஹேஷ்டேகை உருவாக்கி கமல்ஹாசனுக்கு எதிராக தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Archive Link: https://archive.vn/UGKRn
Archive Link: https://archive.vn/Es81m
Archive Link:https://archive.vn/duqwX
கருணாநிதி அவர்கள் தனது கடைசிக் காலத்தில் முதுமைக் காரணமாகவும், அவரது முதுகுத் தண்டுவடத்தில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக் காரணமாகவும் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தினார்.
இந்த விஷயம் அனைவரும் அறிந்ததே. இதனாலேயே கமல்ஹாசன் சக்கர நாற்காலியை மேற்கோள் காட்டி பேசும்போது, அவர் கருணாநிதி அவர்களை மனதில் வைத்து இவ்வாறு பேசினார் என்று புரிந்துக் கொள்ளப்பட்டு, இதற்கு எதிர்ப்புகளும் கண்டனங்களும் கிளம்பியுள்ளது.
ஆனால் உண்மையில் கமல்ஹாசன் கருணாநிதி அவர்களை மனதில் வைத்துதான் சக்கர நாற்காலி எனும் வார்த்தையைப் பயன்படுத்தினாரா என்பதை அறிய இதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
கமல்ஹாசன் சக்கர நாற்காலியை மேற்கோள் காட்டி கருணாநிதி அவர்களை விமர்சித்ததாக சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து இதன் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து தீவிரமாக ஆய்வு செய்தோம்.
நம் ஆய்வில் கமல்ஹாசன் அவர்கள் சமூக வலைத்தளங்களில் பரவும் சர்ச்சையை முழுமையாக மறுத்துள்ள வீடியோ ஒன்றைக் காண முடிந்தது.
மக்கள் நீதி மையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிறகு, பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தச் சந்திப்பில் பத்திரிக்கையாளர்கள் சக்கர நாற்காலி மேற்கோள் குறித்து கேள்விக் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு கமல்ஹாசன்,
“அவர்மேல் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் என்னுடைய நாற்காலியைப் பற்றியும், என்னுடைய முதுமையைப் பற்றியும் மட்டுமே பேசினேன். மேலும் அவர் மட்டுமே சக்கர நாற்காலியில் அமர்ந்ததில்லை.
அவருக்கு முன் ரூஸ்வெல்ட்டும் கூட சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்திருந்தார். ஆனால் அவர் இளமையில் அமர்ந்திருந்தார். அதனால் அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார்.”
என்று பதிலளித்திருந்தார்.
(கமல்ஹாசன் அளித்த இந்த விளக்கமானது கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில், வீடியோவின் 2 நிமிட 38 நொடியில் உள்ளது.)
இதன்படி பார்க்கையில் சக்கர நாற்காலியில் அமரும் அளவிற்கு தனக்கு முதுமை வந்தப் பிறகு, தான் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வேன் என்று அர்த்தத்திலேயே கமல்ஹாசன் பேசியுள்ளார் என்பது நமக்கு தெளிவாகின்றது.
சக்கர நாற்காலியை மேற்கோள் காட்டி கமல்ஹாசன் கருணாநிதி அவர்களை விமர்சித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் கருத்து தவறான ஒன்று என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Twitter Profile: https://twitter.com/roshinilomesh/status/1365160944607711241
Twitter Profile: https://twitter.com/vickytnpl/status/1365148548954660867
Makkal Neethi Mayyam: https://www.youtube.com/watch?v=27v-XT24RkY&feature=youtu.be
Twitter Profile: https://twitter.com/U2Brutus_off/status/1365201710520524802
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 30, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 27, 2025