Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: திமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பறந்த அரசு பேருந்து மேற்கூரை
Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்டதாகும்.
பொள்ளாச்சியில் காற்றில் பறந்த அரசு பேருந்து மேற்கூரை என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“விடியல் அரசின் சாதனை. ஓடும் அரசுப் பேருந்தின் கூரை பறந்ததால் பொள்ளாச்சி அருகே பரபரப்பு.” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஒரே செல்போன் எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்தினால் கட்டணம் விதிக்க உள்ளதா டிராய்?
Fact Check/Verification
பொள்ளாச்சியில் காற்றில் பறந்த அரசு பேருந்து மேற்கூரை என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த 2019ஆம் ஆண்டு ”Roof of a town bus (TNSTC) in #pollachi fly away when the bus had passengers inside. Proof of the amazing condition of govt-owned buses in TN. @MRVijayabaskar1 @CMOTamilNadu” என்று மேகா காவேரி (News Minute) என்கிற ஊடகவியலாளர் இதனைத் தனது X (அன்றைய ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
தொடர்ந்து, இந்த வீடியோ குறித்து செய்திகளில் ஆராய்ந்தபோது கடந்த ஜூன் 14, 2019 ஆம் ஆண்டு புதியதலைமுறை, News Minute மற்றும் தினதந்தியில் இது குறித்த செய்தி வெளியாகியிருந்தது. அதன்படி, பலத்த சூறைக்காற்றில் பறந்த அரசு பேருந்து மேற்கூரை என்று அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது.
Also Read: காங்கிரஸ் அறிவித்த ₹8500 பெற இஸ்லாமிய பெண்கள் வங்கி வாசலில் வரிசையாக நின்றனரா?
Conclusion
பொள்ளாச்சியில் காற்றில் பறந்த அரசு பேருந்து மேற்கூரை என்று பரவும் வீடியோ நிகழ்வு கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
X Post from Megha Kaveri, Dated June 14, 2019
YouTube Video from Puthiyathalaimurai, June 14, 2019
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.