Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
அதிமுக முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பல பெண்களுடன் ஜோடியாக இருப்பதாக பரவும் படம்.
வைரலாகும் படம் தவறானதாகும். அப்படத்திலிருப்பவர் கர்நாடக மாநிலம் உடுப்பியை சார்ந்த ஊர்க்காவல் படையை சார்ந்த நபரின் படமாகும்.
ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஒன்பது குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலைலையில் அதிமுக முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் இவ்வழக்கில் தப்பித்தது ஏன் என்று கேட்டு இளைஞர் ஒருவரின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
அந்த இளைஞர் பல பெண்களுடன் ஜோடியாக படம் எடுத்துள்ள படங்கள் அதில் இடம்பெற்றிருந்தது. அந்த இளைஞர்தான் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பெண் ராணுவ வீரர் கிரண் ஷெகாவத் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இறந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீனுக்கு தொடர்புள்ளதாக நக்கீரன் செய்தி ஒன்றை வெளியிட்டிருப்பதை நம் தேடலில் காண முடிந்தது.
இச்செய்தியை ஜெயராமன் மறுத்திருந்ததையும் காண முடிந்தது.
இந்நிலையில் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் என்று கூறி படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். நக்கீரன் வெளியிட்டிருந்த செய்தியில் பிரவீனின் படம் பயன்படுத்தப்பட்டிருந்தது.

அதேபோல் விகடன் வெளியிட்டிருந்த மற்றொரு செய்தியில் பொள்ளாச்சி ஜெயராமனின் இரண்டு மகன்களும் (மூத்த மகன் அக்னீஸ் முகுந்தன், இளைய மகன் பிரவீன்) இருக்கும் படம் பயன்படுத்தப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இப்படங்களில் இருப்பவர்களின் தோற்றத்தை வைரலாகும் படத்திலிருக்கும் இளைஞரின் புகைப்படத்தோடு ஒப்பிட்டு பார்க்கையில் வைரலாகும் படத்திலிருப்பவர் ஜெயராமனின் மகன் அல்ல என அறிய முடிந்தது.

இதனையடுத்து வைரலாகும் படத்திலிருக்கும் இளைஞர் குறித்து அறிய, அப்படத்தை கூகுள் லென்ஸ் உதவியுடன் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் “Romeo Home Guard Suspended After Selfies with Girls goes Viral’ என்று தலைப்பிட்டு மேங்களூர் டுடே வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் படம் பயன்படுத்தப்பட்டிருந்ததை காண முடிந்தது.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் ஊர்க்காவல் படையை சார்ந்த சுஜித் ஷெட்டி என்பவர் பல பெண்களுடன் ஜோடியாக சேர்ந்து புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அப்படங்கள் வைரலானதை தொடர்ந்து சுஜித் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் வேறு சில ஊடகங்களிலும் இதே தகவல் வைரலாகும் படங்களுடன் வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
Also Read: RSS ஆதரவாளர்கள் புர்கா அணிந்துக்கொண்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டனரா?
பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பல பெண்களுடன் ஜோடியாக இருப்பதாக பரவும் புகைப்படத் தகவல் தவறானதாகும். உடுப்பி காவலர் ஒருவரின் படத்தை வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Youtube video from Nakkheeran, Dated August 30, 2019
Report from Vikatan, Dated March 14, 2019
Report from Mangalore Today, Dated March 16, 2018