Fact Check
பெண்களிடம் ஒருமையில் பேசிய பொன்முடி.. இச்சம்பவம் அண்மையில் நடந்ததா?
Claim
அண்மையில் பெண்களிடம் ஒருமையில் பேசிய பொன்முடி.
Fact
இச்சம்பவம் 2023 ஜூலையில் நடந்த பழைய சம்பவமாகும்.
அமைச்சராக இருந்த பொன்முடி இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை கிளம்பிய நிலையில் அவரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருந்தது. கூடவே திமுகவில் வகித்து வந்த துணை பொதுச்செயலர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டிருந்தார்.
அண்மையில் மீண்டும் அவருக்கு திமுகவில் துணை பொதுச்செயலர் பொறுப்பு தரப்பட்ட நிலையில், பொன்முடி மீண்டும் பெண்களிடம் ஒருமையில் பேசியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
அவ்வீடியோவில் தக்காளி விலையேற்றம் குறித்து கேள்வி கேட்ட பெண்களிடம் ”அதுக்குறித்து மோடியிடம் கேளு” என்று பொன்முடி பேசுவதை கேட்க முடிந்தது.



சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பிரியாணியில் சாக்கடை நீரை கலந்த இஸ்லாமியர்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
Fact Check/Verification
திமுக துணை பொதுச்செயலர் பொன்முடி அண்மையில் பெண்களிடம் ஒருமையில் பேசியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து இவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் பபிசி நியூஸ் தமிழ் ஊடகத்தின் எக்ஸ் பக்கத்தில் “தக்காளி விலை அதிகமாக உள்ளது என புகார் கூறிய பெண்ணை ஒருமையில் பேசிய அமைச்சர் பொன்முடி” என்று தலைப்பிட்டு வைரலாகும் வீடியோ குறித்து ஜூலை 26, 2023 அன்று செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் தினமலர், தந்தி டிவி, பாலிமர் நியூஸ், நியூஸ் 18 தமிழ்நாடு உள்ளிட்ட ஊடகங்களிலும் 2023 ஜூலையில் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.
இதனடைப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய பழைய வீடியோ என தெளிவாகின்றது.
Also Read: ‘உங்க விஜய்’ பாடலை ரசிக்கும் இயக்குநர் கெளதம் மேனன் என்று பரவும் வீடியோ உண்மையா?
Conclusion
திமுக மூத்தத்தலைவர் பொன்முடி அண்மையில் பெண்களிடம் ஒருமையில் பேசியதாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். 2023 ஆம் ஆண்டில் நடந்த சம்பவம் அண்மையில் நடந்ததாக பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post By BBC News Tamil, Dated July 26, 2023
YouTube Video By Dinamalar, Dated July 26, 2023
YouTube Video By Thanthi TV, Dated July 27, 2023
YouTube Video By Polimer News, Dated July 26, 2023
YouTube Video By News 18 Tamil Nadu, Dated July 27, 2023