வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact CheckFact Check: சீனாவில் புழு மழை பெய்ததாகப் பரவிய வீடியோ தகவல் உண்மையா?

Fact Check: சீனாவில் புழு மழை பெய்ததாகப் பரவிய வீடியோ தகவல் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim
சீனாவில் பெய்த புழுக்கள் மழை; அதிர்ச்சியில் மக்கள்.

Fact
வைரலாகும் வீடியோவில் இருப்பவை Poplar மரங்களில் இருந்து விழும் பூக்களின் தொகுப்பு மஞ்சரி ஆகும்.

சீனாவில் புழு மழை பெய்ததாக வீடியோ தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

”சீனாவில் பெய்த புழு மழை; அதிர்ச்சியில் மக்கள்!” என்பதாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். டைம்ஸ் நவ் உள்ளிட்ட செய்தி ஊடகங்களும் இதைப்பகிர்ந்துள்ளன.

Screenshot from Twitter @reporter_hameed
Screenshot from Twitter @uyirmeinews
Screenshot from Twitter @TimesNow
Screenshot from Facebook/navas.banu.5

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தாய்லாந்தில் ‘ஓம்’ என்ற வார்த்தையை உச்சரித்தால் மலையை விட உயரத்தில் பறக்கும் நீருற்று; வைரலாலும் வீடியோவின் உண்மை என்ன?

Fact Check/Verification

சீனாவில் புழு மழை பெய்ததாகப் பரவிய வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகிய வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.

நம்முடைய தேடுதலில் சீனாவின் அரசியல் மற்றும் பொருளாதார பத்திரிக்கையாளரான Shen Shiwei, பிரேசிலின் The Rio Times வெளியிட்டிருந்த இச்செய்தியின் கீழ் ட்விட்டரில் “நான் பெய்ஜிங்கில் இருக்கிறேன். இந்த வீடியோ போலியானது. பெய்ஜிங்கில் கடந்த சில நாட்களில் இதுபோன்ற மழை எதுவும் பெய்யவில்லை” என்று தெரிவித்துள்ளது தெரிய வந்தது.

தொடர்ந்து, நம்முடைய தேடுதலில் Vxujianing என்கிற ட்விட்டர் பயனாளி, InsidePaper வெளியிட்டிருந்த சீனாவில் புழுக்கள் மழையாகப் பொழிந்தது என்கிற பதிவின் கீழ், “போலிச்செய்தி! Poplar மரங்களில் இருந்து விழும் மஞ்சரிகள் இவை ஆகும். பாப்லர் மரங்களின் கூம்புப்பகுதிகள் கீழே விழ ஆரம்பித்தால் அவை பூக்கத் துவங்கும் காலம் ஆரம்பிக்கிறது என்று அர்த்தம்” என்பதாக பதிவிட்டுள்ளார். அது தொடர்பான புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

Soraya என்கிற ட்விட்டர் பதிவர் இந்த பூக்கள் தொகுப்பு உதிரும் மஞ்சரியின் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் சிலரும், இது Liaoning நகரில் poplar மரங்களில் இருந்து உதிரும் பாகங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

JournoTurk என்கிற ஊடக ட்விட்டர் பக்கத்திலும் “Fake News Of The Week Thousands of newspapers, TV channels and news sites all over the world shared that fake news: China Pummeled By Rain Of Worms NO it was not rain of worms. In fact those things on the cars were leaves as U can see from the video below.” என்று இது தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில், இடம்பெற்றுள்ள வீடியோவில் வைரலாகும் வீடியோ பதிவில் இடம்பெற்றிருக்கும் liaoning நகர பதிவு எண் கொண்ட கார் இடம்பெற்றுள்ளது.

Also Read: அழிவின் விளிம்பில் இருக்கும் ஊதுபாவை மூலிகை எனப்பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Conclusion

சீனாவில் புழு மழை பெய்ததாகப் பரவிய வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Twitter Post From, Vxujianing
Twitter Post From, JournoTurk
Twitter Post From, Soraya


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular