சீன வங்கிகளில் பணம் எடுப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது சீன அரசு. இதன்படி ஒரு தனிநபர் அவரது சொந்த செலவிற்காக தனது வங்கி கணக்கிலிருந்து ஒரு இலட்சத்திலிருந்து 3 இலட்சம் யுவான்கள் வரை மட்டுமே எடுக்க முடியும்.
தொழில் செய்பவர்கள் அவர்களது வணிகத்திற்காக 5 இலட்சம் யுவான்கள் வரை எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் தேவைப்பட்டால் அரசிடம் முறையாக அனுமதி வாங்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
இந்நிலையில் சீன அரசின் இந்த முடிவுக்கு இந்தியப் பிரதமர் மோடியின் சர்வாதிகாரப் போக்குதான் காரணம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்கள் டிவீட் ஒன்றை பதிவிட்டதாக ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்த ஸ்கிரீன்ஷாட்டை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ரவிவர்மா ஓவியம் என்று நடிகை சுப்ரமணியபுரம் சுவாதியின் புகைப்படம் வைரல்!
Fact Check/Verification
சீன அரசு கொண்டு வந்துள்ள வங்கிக் கட்டுப்பாடுகளுக்கு பிரதமர் மோடிதான் காரணம் என்று திருமாவளவன் டிவீட் செய்ததாக வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் உண்மைத்தன்மை குறித்து அறிய இதுக்குறித்து தேடினோம்.
இந்த தேடலில் திருமாவளவன் அவர்களின் டிவீட் என்று வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் பின்புலத்தில் இருந்த உண்மைத்தன்மை நமக்கு தெளிவாகியது.
உண்மையில் திருமாவளவன் பதிவிட்டதாக வைரலாகும் டிவீட், திருமாவளவன் அவர்களால் பதிவிட்டதே அல்ல; அது திருமாவளவன் அவர்கள் பெயரில் இயங்கும் போலிக் கணக்கிலிருந்து பதிவிட்டதாகும்.
திருமாவளவன் அவர்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கின் ஐடி @thirumaofficial என்பதாகும்.

ஆனால் வைரலாகும் டிவீட் @thirumaoffical என்கிற ஐடியிலிருந்து பதிவிடப்பட்டுள்ளது.

இந்த போலி கணக்கு தற்போது டிவிட்டர் தளத்திலிருந்து முடக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இதேபோல் ஏற்கனவே நாராயணன் திருப்பதி அவர்களின் பேரில் இயங்கிய போலிக் கணக்கிலிருந்து பதிவிடப்பட்ட கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அவைகளை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்து அக்கருத்துகளை நாராயணன் திருப்பதி பதிவிடவில்லை, அவர் பெயரில் இயங்கிய போலிக் கணக்கிலிருந்து பதிவிடப்பட்டது என்பதை ஆதாரத்துடன் விளக்கியிருந்தோம்.
அச்செய்திகளைப் படிக்க:
- “பாரதம் காக்கும் பாரதப் பிரதமர் அவர்களுக்கு டிவிட்டர் இவ்வாறு உரை எழுதியுள்ளதா”; வைரலாகும் நாராயணன் திருப்பதியின் டிவீட் உண்மையானதா?”
- ஜெயரஞ்சன் குறித்து நாராயணன் திருப்பதி இவ்வாறு டிவீட் செய்தாரா?
இதனைத் தொடர்ந்து தற்போது திருமாவளவன் அவர்கள் பெயரில் இயங்கும் போலிக் கணக்கு வெளியிட்ட டிவீட் குறித்து ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
Conclusion
சீன வங்கிகளில் பணம் எடுப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை சீன அரசு கொண்டு வந்ததற்கு பிரதமர் மோடிதான் காரணம் என்று திருமாவளவன் டிவீட் செய்ததாக பரவும் ஸ்கிரீன்ஷாட் திருமாவளவன் அவர்களால் பதிவிட்ட டிவீட்டின் ஸ்க்ரீன்ஷாட்டே அல்ல, அது அவர் பெயரில் இயங்கிய போலிக் கணக்கிலிருந்து பதிவிட்ட டிவீட்டின் ஸ்க்ரீன்ஷாட்டாகும்.
இதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Imposter
Our Sources
Twitter Advanced Search:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)