ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஇந்து மதத்திற்கு மாறினாரா பிரபலப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ்?

இந்து மதத்திற்கு மாறினாரா பிரபலப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ்?

உரிமை கோரல்

மலையாளப் பாடகரான யேசுதாஸ் கிறிஸ்துவ மதத்தை விட்டு  இந்து மதத்திற்கு மாறிவிட்டார்,ஊடகங்கள் அனைத்தும் அமைதியாக இருப்பது ஏன் ?உங்களால் முடிந்தவரைப் பகிருங்கள் … வந்தே மாதரம் !!!!!

சரிபார்ப்பு

தமிழ் உட்பட 14 மொழிகளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டத் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார் பிரபலப் பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ். ஏழு முறை தேசிய விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

கிறிஸ்தவரான ஜேசுதாஸ், இந்துக் கடவுள்கள் குறித்துப் பல்வேறு பக்திப்பாடல்களையும் பாடியுள்ளார். நாடு முழுவதும் பல்வேறுக் கோவில்களில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.    இதை வைத்துப் பல தவறான செய்திகள் ஊடகங்களில் பரவி வந்தன. எங்களது நியூஸ்செக்கரின் வாட்ஸாப் எண்ணில் வந்த செய்தியின் உண்மைத் தன்மையை அறியத் தொடங்கினோம்.

உண்மை சோதனை

ரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்த யேசுதாஸ், இந்துக் கடவுள்களின் மீதும் நம்பிக்கை மிகுந்தவராக இருந்தார். இந்நிலையில் தனது 76வது  பிறந்தநாளையொட்டி ,கர்நாடக மாநிலம் மங்களூருக்கு அருகில் உள்ள கொல்லூர் மூகாம்பிகைக் கோவிலுக்கு அவர் சென்றார். இதனால் அவர் இந்து மதத்துக்கு மாறியதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்தத் தகவலை யேசுதாஸ் மனைவி பிரபா அவர்கள் முற்றிலுமாக மறுத்து உள்ளார்,இது தொடர்பாக அவர் அளித்தப்  பேட்டியில் “இந்த வதந்தி எப்படிப் பரவியது என்பதுத் தெரியவில்லை, ஆனால் இது சிறிதும் உண்மை இல்லை” என்று தெரிவித்து உள்ளார் .இதைப் பற்றி ஆசியாநெட் ,தி நியூஸ் மினிட் மற்றும் ‘பெங்களூர் மிரர்’ பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

முடிவுரை

எங்களின் ஆராய்ச்சிக்குப் பின்னர் பாடகர் யேசுதாஸ் இந்து மதத்திற்கு மாறவில்லை என்பது தெரியவந்து உள்ளது. மேலும் 2016-ம் ஆண்டு வெளியான தவறானச் செய்தியை மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரவவிட்டு இருக்கிறார்கள்.

Sources

  • Google Search
  • Twitter 

Result: FALSE

(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Most Popular