Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பீகாரில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக புரட்சி நடந்ததாக பரவும் வீடியோ.
இத்தகவல் தவறானதாகும். நேபாளத்தில் நடந்த Gen Z இளைஞர்கள் போராட்ட வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
பீகாரில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக புரட்சி நடந்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.




சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பீகார் தேர்தல் முடிவுக்குப்பின் பாஜகவை எதிர்த்து மக்கள் திரண்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
பீகாரில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக புரட்சி நடந்ததாக பரப்பப்படும் வீடியோவை கவனமாக பார்க்கையில், அவ்வீடியோவில் காண்டாமிருகம் சிலைக்கு கீழே காணப்பட்ட கல்வெட்டில் நேபாள நாட்டின் கொடி இடம்பெற்றிருந்தது.
அதேபோல் கலவரக்காரர்களும் நேபாள நாட்டின் கொடியை கையில் ஏந்தி இருந்ததை காண முடிந்தது.

இதுத்தவிர்த்து கலவரக்காரர்கள் நின்றிருந்த கட்டடத்தில் “நேபாள நாட்டிலுள்ள பரத்பூர் நகரத்தின் சித்வான் பகுதியிலுள்ள மாவட்ட நிர்வாக அலுவலகம்” என்று நேபாளி மொழியில் எழுதப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதனைத் தொடர்ந்து கூகுள் மேப்பின் உதவியுடன் ஆராய்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் பகுதி நேபாளத்தின் சித்வான் பகுதியில் உள்ள மாவட்ட நிர்வாக அலுவலகம் என உறுதி செய்ய முடிந்தது.


இதனையடுத்து வைரலாகும் வீடியோ எத்தருணத்தில் எடுக்கப்பட்டது என ஆராய்கையில்நேபாளத்தில் நடந்த Gen Z இளைஞர்கள் போராட்டம் என்று குறிப்பிட்டு வைரலாகும் இவ்வீடியோ செப்டம்பர் மாதத்திலேயே சமூக ஊடகங்களில் பரவி வந்ததை காண முடிந்தது. அவற்றை இங்கே மற்றும் இங்கே காணலாம்.


இதனை தொடர்ந்து தேடுகையில் நேபாள ஊடகமான காத்மாண்டு போஸ்ட் ஊடகத்தின் செய்தியில் செப்டம்பர் 9, 2025 அன்று சித்வான் பகுதியில் மட்டும் 79 அரசு அலுவலகங்கள் Gen Z போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தேடுகையில் நேபாள ரேடியோ ஊடகமான சினர்ஜி எஃப்.எம்.மின் ஃபேஸ்புக் பக்கத்தில் சித்வான் மாவட்ட நிர்வாக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டதாக செப்டம்பர் 9, 2025 அன்று புகைப்படங்களுடன் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
அப்புகைப்படங்களில் வைரலாகும் வீடியோவுக்கு ஒற்றுப்போகும் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும்வீடியோ நேபாள நாட்டில் நடந்த Gen Z இளைஞர்கள் போராட்டத்திற்கு தொடர்புடையது என அறிய முடிந்தது. வைரலாகும் வீடியோவுக்கும் பீகாருக்கும் தொடர்பில்லை எனவும் தெளிவாகின்றது.
இதே வீடியோ லடாக்கில் நடந்த போராட்டம் என்று கூறி கடந்த செபடம்பர் மாதம் சமூக ஊடகங்களில் பரவியது. அச்சமயத்தில் நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் இவ்வீடியோ Gen Z இளைஞர்கள் போராட்டத்திற்கு தொடர்புடையது என்று தெளிவுப்படுத்தி ஃபேக்ட்செக் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அக்கட்டுரையை இங்கே படிக்கலாம்.
Also Read: நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்த தலைமுறை ஹீரோக்களில் முதலிடம் என்பதாக சர்வே வெளியிட்டதா தந்தி டிவி?
பீகாரில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக புரட்சி நடந்ததாக கூறி பரப்பப்படும் வீடியோ தகவல் தவறானதாகும். செப்டம்பர் மாதத்தில் நேபாளத்தில் நடந்த Gen Z இளைஞர்கள் போராட்ட வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Facebook post by Synergy FM, dated September 9, 2025
Report by The Kathmandu Post, dated September 15, 2025
YouTube post shared on September 12, 2025
Instagram post shared on September 13, 2025
Google Maps
Self Analysis
Ramkumar Kaliamurthy
November 24, 2025
Ramkumar Kaliamurthy
November 17, 2025
Ramkumar Kaliamurthy
November 6, 2025