Fact Check
அமித் ஷாவின் காலணிகளை ஊடகவியலாளர் நவிகா குமார் துடைத்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
Claim
அமித் ஷாவின் காலணிகளை ஊடகவியலாளர் நவிகா குமார் துடைத்ததாக பரவும் வீடியோ.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: கேரளாவில் முஸ்லீம் பெண் வேட்பாளரின் படத்திற்கு பதிலாக அவரின் கணவர் படத்தை பயன்படுத்தி ஓட்டு கேட்கப்பட்டதா?
Fact
அமித் ஷாவின் காலணிகளை ஊடகவியலாளர் நவிகா குமார் துடைத்ததாக பரப்பப்பட்டும் வீடியோவை கூர்ந்து கவனிக்கையில் சில இடங்களில் அமித் ஷாவின் முகம் மாறுபடுவதையும், அவரின் காலணியின் நிறம் மாறுவதையும் காண முடிந்தது.




அதேபோல் முக அசைவுகள், உடலசைவுகள் போன்றவையும் இயல்பாக இல்லாமல் செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றப்பட்ட வீடியோக்கள்போல் இருப்பதை உணர முடிந்தது.
இதனையடுத்து செயற்கை நுண்ணறிவு வீடியோக்களை கண்டறிய உதவும் டீப்ஃபேக்-ஓ-மீட்டர் கருவி மூலம் வைரலாகும் வீடியோவை பரிசோதித்தோம். அதில் வைரலாகும் வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என உறுதியானது.

Also Read: திரிஷாவின் செல்ஃபியின் பின்புறம் தவெக துண்டு கிடப்பதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?
இதை தொடர்ந்து தேடுகையில் நவிகா குமாரின் எக்ஸ் பக்கத்தில் அமித் ஷாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

இப்படத்தை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி எடிட் செய்தே வைரலாகும் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஃபேக்ட்செக் கட்டுரையானது நியூஸ்செக்கர் உருதில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது.
Sources
X post by Navika Kumar, Group Editor-in-Chief, Times Now, dated November 3, 2025
Deepfake-O-Meter tool