ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkபுனித் ராஜ்குமார் மயங்கி விழுந்த கடைசி நிமிட சிசிடிவி காட்சி என்று பரவும் தவறான வீடியோ!

புனித் ராஜ்குமார் மயங்கி விழுந்த கடைசி நிமிட சிசிடிவி காட்சி என்று பரவும் தவறான வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

புனித் ராஜ்குமாரின் இறுதி நிமிட சிசிடிவி காட்சி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புனித்
Source: Facebook

கன்னட சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகர் புனித் ராஜ்குமார். மறைந்த நடிகர் டாக்டர் ராஜ்குமாரின் மகனான இவர், கடந்த அக்டோபர் 29 ஆம் தேதியன்று காலை வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருடைய இறுதிச்சடங்கும் நேற்று நடைபெற்று முடிந்துவிட்டது.

இந்நிலையில், “கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் இறுதி நிமிட CCTV” என்கிற தலைப்பில் ஒருவர் இதயவலியால் படிகளில் இருந்து மயங்கி விழுவது போன்ற வீடியோ வைரலாகிறது.

புனித்
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் உண்மையில் யாரிடம் மன்னிப்பு கோரினார் வினோத் ராய்? செய்தியின் முழு பின்னணி!

Fact check/ Verification

புனித் ராஜ்குமாரின் இறுதி நிமிட சிசிடிவி காட்சி என்று வைரலாகும் சிசிடிவி வீடியோ காட்சி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தபோது நடிகர் சித்தார்த் சுக்லா உயிரிழந்தபோதும் இதே வீடியோ வைரலாகிய நிலையில் ஏற்கனவே நியூஸ் செக்கர் இந்தி சார்பில், இதுகுறித்த உண்மையறியும் சோதனை செய்தி வெளியாகியுள்ளது.

அதன்படி, குறிப்பிட்ட வீடியோ குறித்த செய்தி Newsfirst என்கிற கன்னட செய்தித்தளத்தில் கடந்த 2021, செப்டம்பர் 3 ஆம் தேதியன்று வெளியாகியுள்ளது.

புனித்
Source: NewsFirst

மேலும், அருண் தேஷ்பாண்டே என்கிற ட்விட்டர் பயனாளர் குறிப்பிட்ட வீடியோவை செப்டம்பர் 1, 2021 ஆம் தேதியன்று பகிர்ந்து, “பெங்களூருவில் 33 வயதான இளைஞர் ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வந்தவுடன் மாரடைப்பால் உயிரிழந்த இறுதி நிமிட சிசிடிவி காட்சி. ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரின் முழுமையான அறிவுரை மற்றும் இதய பரிசோதனைக்குப் பிறகே உடற்பயிற்சிக்கு ஜிம்மில் சேர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Source: Twitter

நம்முடைய ஆங்கில செய்தியாளர், குறிப்பிட்ட வீடியோ சித்தார்த் சுக்லாவுடையதா என்கிற கேள்வி வாசகரால் கடந்த செப்டம்பர் மாதம் எழுப்பப்பட்ட போது கர்நாடகாவின் பனஷங்கரி பகுதியில் அமைந்துள்ள குறிப்பிட்ட அந்த வீடியோவில் இளைஞர் மயங்கி விழுகின்ற தனியார் உடற்பயிற்சி நிலையத்துடன் தொடர்பு கொண்டு பேசி நடைபெற்ற செய்தி உண்மைதான் என்று உறுதி செய்துள்ளார்.

எனவே, குறிப்பிட்ட வீடியோ புனித் ராஜ்குமாரின் இறுதி சிசிடிவி காட்சி என்று வைரலாகும் தவறான வீடியோ காட்சி என்பது உறுதியாகிறது.

Conclusion:

புனித் ராஜ்குமாரின் இறுதி நிமிட சிசிடிவி காட்சி என்று வைரலாகும் சிசிடிவி வீடியோ காட்சி குறித்த தகவல் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources:

Twitter

News First Kannada

News Checker Hindi

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular