வெள்ளிக்கிழமை, டிசம்பர் 20, 2024
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 20, 2024

HomeFact Check“தேர்தலுக்கு முன் திமுகவை உடைக்கும் திட்டமா? உதயநிதி vs கனிமொழி” என்கிற தலைப்பில் விவாத நிகழ்ச்சி...

“தேர்தலுக்கு முன் திமுகவை உடைக்கும் திட்டமா? உதயநிதி vs கனிமொழி” என்கிற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடத்தியதா புதிய தலைமுறை?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: “தேர்தலுக்கு முன் திமுகவை உடைக்கும் திட்டமா? உதயநிதி vs கனிமொழி” என்கிற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடத்தியது புதிய தலைமுறை

Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியானதாகும். புதிய தலைமுறை இத்தகவலை மறுத்துள்ளது.

“அதிருப்தியில் திமுக சீனியர்கள்… கனிமொழி VS உதயநிதி.. கலைஞர் திமுக! தேர்தலுக்கு முன் திமுகவை உடைக்கும் திட்டமா?” என்கிற தலைப்பில் புதிய தலைமுறை விவாத நிகழ்ச்சி நடத்தியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

தேர்தலுக்கு முன் திமுகவை உடைக்கும் திட்டமா? உதயநிதி vs கனிமொழி என்கிற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடத்தியது புதிய தலைமுறை

Post Link | Archive Link

“தேர்தலுக்கு முன் திமுகவை உடைக்க திட்டமா? உதயநிதி vs கனிமொழி” என்கிற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடத்தியது புதிய தலைமுறை

Archive Link

“தேர்தலுக்கு முன் திமுகவை உடைக்க திட்டமா? உதயநிதி vs கனிமொழி” என்கிற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடத்தியது புதிய தலைமுறை

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மோகினி டேவின் இசையை ரசிக்கும் ஏஆர்.ரஹ்மான் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check/Verification

“தேர்தலுக்கு முன் திமுகவை உடைக்கும் திட்டமா? உதயநிதி vs கனிமொழி” என்கிற தலைப்பில் புதிய தலைமுறை விவாதம் நடத்தியதாக நியூஸ்கார்டு ஒன்று பரவிய நிலையில் இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

முன்னதாக புதிய தலைமுறையின் சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து தேடினோம்.  இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள நவம்பர் 28 ஆம் தேதியில்ரஜினி திரையுலக சூப்பர் ஸ்டார்… நான் அரசியல் சூப்பர் ஸ்டார் – சீமான்.. விஜய்… உதயநிதி… யாருக்கு சேதி சொல்கிறார் சீமான்?”  என்கிற தலைப்பில் விவாதம் நடத்தவிருப்பதாக நியூஸ்கார்டு வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இந்த விவாதத்தில் விருந்தினர்களாக கலந்துக் கொண்டிருந்தவர்களும் வைரலாகும் நியூஸ்கார்டில் இடம்பெற்றிருந்த விருந்தினர்களும் வேறுபட்டிருப்பதையும் காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் நவம்பர் 27 ஆம் தேதி நடந்த விவாதத்தில் வைரலாகும் நியூஸ்கார்டில் காணப்பட்ட விருந்தினர்கள் கலந்துக் கொண்டிருப்பதை காண முடிந்தது.

ஆனால் விவாதத்தின் தலைப்புஅதிருப்தியில் திமுக சீனியர்கள்… கனிமொழி VS உதயநிதி.. கலைஞர் திமுக! தேர்தலுக்கு முன் திமுகவை உடைக்கும் திட்டமா? “ என்று இல்லை; கட்சியை முழுமையாக தன் ஆளுகைக்குள் கொண்டுவருகிறாரா எடப்பாடி பழனிசாமி  என்றே இருந்தது.

இதன்படி பார்க்கையில் வைரலாகும் நியூஸ்கார்டு நவம்பர் 27 ஆம் தேதியின் விவாத நிகழ்ச்சியின் நியூஸ்கார்டை எடிட் செய்து உருவாக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனையடுத்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு பேசுகையில் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்பதை அவரும் உறுதி செய்தார்.

Also Read: ஓடும் நர்மதை நதியில் பிடிமானமின்றி இயற்கையாக அமைந்திருக்கும் கற்களா இவை?

Conclusion

தேர்தலுக்கு முன் திமுகவை உடைக்கும் திட்டமா? உதயநிதி vs கனிமொழி” என்கிற தலைப்பில் புதிய தலைமுறை விவாதம் நடத்தியதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X post from Puthiya Thalaimurai, Dated November 27, 2024
X post from Puthiya Thalaimurai, Dated November 28, 2024
Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai

உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular