தேர்தல் வாக்குப்பதிவு நிலவரமாக மதியம் மூன்று மணியளவில் 53.5% வாக்குப்பதிவு என்பதுடன் கருத்துக்கணிப்பு விவரமாக அதிமுகவிற்கு 66% மற்றும் திமுக 28% வாக்குகளைப் பெற்றுள்ளது என்று புதியதலைமுறை நியூஸ்கார்டு வெளியிட்டதாகப் புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் வைரலாகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதியான நேற்று தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்தது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக அனைத்து தொகுதிகளுக்கும் சேர்த்து 72.78% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து செய்தித் தொலைக்காட்சிகளும் வாக்குப்பதிவு நிலவரத்தை தொடர்ச்சியாக நேரலையில் வெளியிட்டு வந்த நிலையில், முன்னணி செய்தி நிறுவனங்களில் ஒன்றான புதியதலைமுறை மதியம் மூன்று மணி அளவிலான வாக்குப்பதிவு நிலவரத்தை வெளியிடும்போது, கருத்துக்கணிப்பு விவரம் அதிமுக 66%, திமுக 28% மற்றவை 6% என்று புள்ளிவிவரங்களையும் சேர்த்து வெளியிட்டதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
சீனிவாசன்.ஆர் என்பவர் இதனை சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். 283 பேருக்கும் அதிகமானோர் இதனை ஷேர் செய்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
தேர்தல் வாக்குப்பதிவு நிலவரத்துடன் அதிமுகவிற்கு அதிக சதவீத வாக்குப்பதிவு என்பதாக புதியதலைமுறை செய்தி வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் உண்மையிலேயே புதியதலைமுறையால் வெளியிடப்பட்டதா என்பதை அறிய அவர்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தை ஆராய்ந்தோம்.
ஆனால், புதியதலைமுறை வாக்குப்பதிவு நிலவரம் குறித்து வெளியிட்ட நியூஸ் கார்டு முற்றிலும் வேறாக இருந்தது. காலையிலிருந்து இரவு வரை ஒரே வகையான நியூஸ்கார்டே வாக்குப்பதிவு சதவீதத்தை நேரவாரியாக குறிப்பிட பயன்படுத்தப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து, புதியதலைமுறை செய்தியாளரிடம் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட அந்த அதிமுக வாக்குப்பதிவு சதவீத புகைப்படம் குறித்து கேட்டபோது, “பரவும் புகைப்படம் போலியாக புதியதலைமுறை வெளியிட்டு இருப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

எடிட் செய்யப்பட்டது

உண்மையான புகைப்படம்
எனவே, குறிப்பிட்ட அந்த நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.
Conclusion:
தேர்தல் வாக்குப்பதிவு நிலவரத்துடன் அதிமுகவிற்கு அதிக சதவீத வாக்குப்பதிவு என்பதாக புதியதலைமுறை செய்தி வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்
Result: Fabricated
Our Sources:
Puthiyathalaimurai
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)