Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்திய தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்திய ரஷ்ய அதிபர் புதின்
வைரலாகும் வீடியோவில் புதின் ரஷ்ய தேசிய கீதத்திற்கே மரியாதை செலுத்துகிறார்.
இந்திய தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்திய ரஷ்ய அதிபர் புதின் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“புடினின் செயலுக்கு தலைவணங்கி வாழ்த்து சொல்லத்தான் வேண்டும்” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஜெர்மனியில் சைக்கிள் ஓட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று பரவும் வீடியோ உண்மையா?
இந்திய தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்திய ரஷ்ய அதிபர் புதின் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த பிப்ரவரி 01, 2012 அன்று Elena Shtulman என்னும் யூடியூப் பக்கத்தில் வைரலாகும் வீடியோவின் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், அதில் ரஷ்ய தேசிய கீதமே ஒலிக்கிறது என்பதை நம்மால் தெளிவாக்க முடிந்தது.
கடந்த பிப்ரவரி 24, 2015 அன்று யூடியூப் பக்கத்திலும் “Putin – Momentary Putin’s reaction to a national anthem” என்று இடம்பெற்றுள்ள இந்த வீடியோ காட்சியில் புதின் ரஷ்ய தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும் காட்சியை நம்மால் காண முடிந்தது.
Music is love anthems என்கிற பக்கத்தில் இடம்பெற்றிருந்த ரஷ்ய தேசிய கீதத்துடன் இந்த பாடலை ஒத்திட்டு அதனை உறுதி செய்து கொண்டோம்.
எனவே, ரஷ்ய தேசிய கீதத்திற்கு அதிபர் புதின் மரியாதை செலுத்தும் காட்சியே இந்திய தேசிய கீதத்திற்கு அவர் மரியாதை செலுத்துவதாக தவறாக பரப்பப்படுகிறது.
Also Read: பிரதமர் மோடிக்கு சீனா மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தாக பரவும் படம் உண்மையானதா?
இந்திய தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்திய ரஷ்ய அதிபர் புதின் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video By Елена Штульман, Dated Februry 01, 2012
YouTube Video By Music is love anthems, Dated June 02, 2017
Vijayalakshmi Balasubramaniyan
September 3, 2025
Ramkumar Kaliamurthy
August 14, 2023
Vijayalakshmi Balasubramaniyan
March 11, 2022