திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkஆர்.கே.சுரேஷ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்மையில் சந்தித்தாரா?

ஆர்.கே.சுரேஷ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்மையில் சந்தித்தாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ஆருத்ரா வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஆர்.கே.சுரேஷ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்மையில் சந்தித்தார்.

Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் புகைப்படங்கள் ஒரு வருடத்திற்கு முந்திய பழைய படங்களாகும்.

ஆருத்ரா வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் நெடுங்காலமாக தலைமறைவாக இருந்த நிலையில், நேற்றைய முன்தினம் துபாயிலிருந்து சென்னை வந்தார்.

இன்று போலீசாரிடம் இவர் ஆஜராவார் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இவர் நிர்மலா சீதாராமனை அண்மையில் சந்தித்தாக கூறி புகைப்படங்கள் சில ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஆர்.கே.சுரேஷ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்மையில் சந்தித்ததாக பரவும் புகைப்படங்கள்

Twitter Link | Archived Link

ஆர்.கே.சுரேஷ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்மையில் சந்தித்ததாக பரவும் புகைப்படங்கள்

Archived Link

ஆர்.கே.சுரேஷ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்மையில் சந்தித்ததாக பரவும் புகைப்படங்கள்

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாஜகவுக்கு ஓட்டு போடாத சென்னை மக்களுக்கு ₹5000 கோடி நிவாரண நிதி தர முடியாது என்றாரா அண்ணாமலை?

Fact Check/Verification

ஆர்.கே.சுரேஷ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்மையில் சந்தித்ததாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, இதுக்குறித்த உண்மையை அறிய வைரலாகும் புகைப்படங்களை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.

இத்தேடலில் வைரலாகும் படங்கள் ஒரு வருடத்திற்கு முந்திய பழைய படங்கள் என்பதை அறிய முடிந்தது.

ஆர்.கே. சுரேஷ் அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் நவம்பர் 22, 2023 அன்று “Met our honourable finance minister @nsitharaman ji. Thanku for your valuable time madam along with@SathyaJyothi sir” என்று குறிப்பிட்டு வைரலாகும் இதே படங்களை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

இதனடிப்படையில் பார்க்கையில் ஆர்.கே.சுரேஷ் நிர்மலா சீதாராமனை அண்மையில் சந்தித்ததாக பரவும் தகவல் தவறானது என்பது தெளிவாகின்றது.

Also Read: சென்னையில் தேங்கிய மழைநீர் புல்டோசர் மூலம் லாரியில் ஏற்றப்படுவதாகப் பரவும் வதந்தி வீடியோ!

Conclusion

ஆர்.கே.சுரேஷ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்மையில் சந்தித்ததாக பரவும் புகைப்படங்கள் பழைய படங்களாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
X Post from R.K.Suresh, Dated November 23, 2022

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular