Authors
Claim: தேர்தல் முடிவிற்கு பின்னர் பாங்காங்கிற்கு செல்லும் ராகுல் காந்தி
Fact: வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் ராகுல் காந்தி பாங்காங்கிற்கு செல்ல இருப்பதாக போர்டிங் பாஸ் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”24 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிவாகை சூடிய காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர் நேரு குடும்ப பட்டத்து இளவரசர் ராகுல் காந்தி அவர்கள் ஜூன் 6ந்தேதி பாங்காக்கில் இந்தியப் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ள இருக்கிறார்.அதற்காக 5ந்தேதி இரவு 11.05க்கு விமானத்தில் பாங்காங் புறப்பட்டுச் செல்கிறார்.” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.
”Is it true?The next PM is On his vaccination At Bankok?” என்று பாஜக எஸ்.ஆர்.சேகர் இதனைப் பகிர்ந்திருந்தார். இதனைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல அறையின் சாவியுடன்தான் மோடி திரும்ப செல்வார் என்று அண்ணாமலை கூறினாரா?
Fact Check/Verification
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் ராகுல் காந்தி பாங்காங் செல்ல இருப்பதாகப் பரவும் போர்டிங் பாஸ் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் போர்டிங் பாஸ் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது LiveFromALounge.com என்கிற இணையதளப்பக்கத்தில் இப்புகைப்படம் இடம்பெற்றிருந்தது நமக்குத் தெரியவந்தது.
விமானப்போக்குவரத்து, ஹோட்டல்கள், பயணிகளின் அனுபவங்கள் என்று பயணக்கட்டுரைகள் இடம்பெறும் இந்த இணையதளப்பக்கத்தில் “Onboard Vistara To Singapore: The first Vistara international flight ever!” என்று ஆகஸ்டு 07, 2019 அன்று வெளியாகியுள்ள கட்டுரையில் இப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
Live From A Lounge நிறுவனரும், ஆசிரியருமான அஜய் அவ்தானி இக்கட்டுரையில் விஸ்தாரா சர்வதேச விமானப்பயணம் பற்றிய கட்டுரையில் இப்புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளார்.
மேலும், தன்னுடைய டெல்லி முதல் சிங்கப்பூர் வரையிலான விஸ்தாரா சர்வதேச பயண போர்டிங் பாஸ் புகைப்படமே தற்போது ராகுல் காந்தி பாங்காங் பயணம் செய்யவிருப்பதாக எடிட் செய்யப்பட்டு பரவுகிறது என்று நியூஸ்செக்கரிடம் உறுதி செய்துள்ளார் அஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர்கள் இந்திய ராணுவத்தை ஆதரிப்பதாக சத்தியம் செய்தனரா?
Conclusion
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் ராகுல் காந்தி பாங்காங் செல்ல இருப்பதாகப் பரவும் போர்டிங் பாஸ் புகைப்படம் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Our Sources
LiveFromALounge.com column, August 7, 2019
Email from Ajay Awtaney, aviation columnist
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)