Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்திய எல்லைப் பகுதிகளை பாகிஸ்தானிடம் பறிகொடுத்தது குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் நடிகை ஐஸ்வர்யா ராய் கேள்வி எழுப்பினார்.
வைரலாகும் வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் எடிட் செய்யப்பட்ட போலியான வீடியோவாகும்.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் நேற்றைய முன்தினம் சாய்பாபா நூற்றாண்டு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, சச்சின் தெண்டுல்கர், நடிகர் ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இந்நிலையில் இந்திய எல்லைப் பகுதிகளை பாகிஸ்தானிடம் பறிகொடுத்தது குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் ஐஸ்வர்யா ராய் கேள்வி எழுப்பியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
“பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் கேட்க விரும்புகிறேன்.. நாம் ஏன் ஆறு ஜெட் விமானங்களை பாகிஸ்தானிடம் இழந்தோம்? ஏன் நான்கு ரஃபேல் விமானங்களை பாகிஸ்தானிடம் இழந்தோம்? ஏன் இரண்டு S-400 ரக ஏவுகணைகளை பாகிஸ்தானிடம் இழந்தோம்? ஏன் காஷ்மீர் மற்றும் ராஜஸ்தானில் உள்ள நமது எல்லைப் பகுதிகளை பாகிஸ்தானிடம் இழந்தோம்?.. பிரதமரே! திரைப்படத் துறையினர் அரசியலில் ஈடுபடுவதில்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்நாட்டிற்கு பதில்கள் தேவை” என்று ஐஸ்வர்யா ராய் பச்சன் அவ்வீடியோவில் பேசுவதாய் இருந்தது.
இவ்வீடியோவை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பீகார் தேர்தல் முடிவுக்குப்பின் பாஜகவை எதிர்த்து மக்கள் திரண்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
இந்திய எல்லைப் பகுதிகளை பாகிஸ்தானிடம் பறிகொடுத்தது குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் ஐஸ்வர்யா ராய் கேள்வி எழுப்பியதாக பரப்பப்படும் வீடியோவில் ANI ஊடகத்தின் லோகோ இடம்பெற்றிருந்ததால் அந்த ஊடகத்தின் சமூக ஊடகப் பக்கங்களில் இவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் “Actress Aishwarya Rai joins PM Modi, speaks at centenary celebrations of Sri Sathya Sai Baba in AP” என்று தலைப்பிட்டு ANI யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த வீடியோவில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் அதே பின்புலத்தில் ஐஸ்வர்யா ராய் பேசுவதை காண முடிந்தது.
அவ்வீடியோவில் பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதற்கு நன்றி தெரிவித்து ஐஸ்வர்யா ராய் பேசி இருந்தார். இதுத்தவிர்த்து வைரலாகும் வீடியோவில் காணப்பட்ட எந்த கருத்தையும் அவர் பேசி இருக்கவில்லை.
தொடர்ந்து தேடுகையில் டிடி நியூஸ் யூடியூப் பக்கத்தில் இந்நிகழ்ச்சியின் முழுப்பகுதி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அவ்வீடியோவிலும் வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றிருந்த கருத்தை ஐஸ்வர்யா ராய் பேசி இருக்கவில்லை.
இதனையடுத்து வைரலாகும் வீடியோவை கூர்மையாக கவனிக்கையில் அவ்வீடியோவில் ஐஸ்வர்யா ராயின் அசைவுகள், வாயசைவுகள், மற்றும் முடியசைவுகள் இயல்பானதாக இல்லாமல் இருப்பதை காண முடிந்தது. அதேபோல் அவர் அணிந்திருந்த மோதிரம் மறைந்து, பின்பு தோன்றுவதை காண முடிந்தது.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கையில் இவ்வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றப்பட்டதற்கான சாத்தியக்கூறுகளுடன் இருப்பதை உணர முடிந்தது.
ஆகவே செயற்கை நுண்ணறிவு மற்றும் டீப்ஃபேக் வீடியோக்களை கண்டறிய உதவும் கருவிகளான Hiya Deepfake Voice Detector, Resemble.ai உள்ளிட்டவற்றில் வைரலாகும் வீடியோ குறித்து சோதித்தோம்.

அச்சோதனையில் வைரலாகும் வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றப்பட்ட வீடியோ என பதில் வந்தது.
Also Read: பீகாரில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக புரட்சி நடந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
இந்திய எல்லைப் பகுதிகளை பாகிஸ்தானிடம் பறிகொடுத்தது குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் ஐஸ்வர்யா ராய் கேள்வி எழுப்பியதாக பரப்பப்படும் வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் எடிட் செய்யப்பட்ட போலியான வீடியோவாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video By ANI, Dated November 19, 2025
YouTube Video By DD News, Dated November 19, 2025
Resemble.ai Website
Hiya Deepfake Voice Detector
இந்த வீடியோ குறித்து நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஃபேக்ட்செக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதை இங்கே படிக்கலாம்.
Vijayalakshmi Balasubramaniyan
November 26, 2025
Ramkumar Kaliamurthy
November 3, 2025
Vijayalakshmi Balasubramaniyan
October 9, 2025