ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkபுத்தகத்தை திருப்புவதற்கு பதில் தானே திரும்பினாரா ராகுல் காந்தி?

புத்தகத்தை திருப்புவதற்கு பதில் தானே திரும்பினாரா ராகுல் காந்தி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: புத்தகத்தை திருப்புவதற்கு பதில் தானே திரும்பினார் ராகுல் காந்தி

Fact: ராகுல் காந்தி பாஜகவினர் இவ்வாறு செய்வர் என்று கூறி அவர்களை கிண்டல் செய்யும் விதமாக இவ்வாறு செய்தார்.

ராகுல் காந்தியிடம் புத்தகத்தின் பின்பகுதியை காட்ட சொன்னதற்கு, திரும்பி அவரின் பின்பகுதியை காட்டியதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ராகுல் காந்தி புத்தகத்தை திருப்புவதற்கு பதில் தானே திரும்பினார் என்று பரவும் வீடியோத் தகவல்
Screenshot from Twitter@kaippulla123

Twitter Link | Archived Link

ராகுல் காந்தி புத்தகத்தை திருப்புவதற்கு பதில் தானே திரும்பினார் என்று பரவும் வீடியோத் தகவல்
Screenshot from Twitter@Suresh33737771

Archived Link

ராகுல் காந்தி புத்தகத்தை திருப்புவதற்கு பதில் தானே திரும்பினார் என்று பரவும் வீடியோத் தகவல்
Screenshot from Twitter@Chella_Ramesh1

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாப்கார்னில் சிறுநீர் கலந்து விற்பனை செய்த முஸ்லீம் இளைஞர் என்று பரவும் பொய் தகவல்!

Fact Check/Verification

ராகுல் காந்தி புத்தகத்தை திருப்புவதற்கு பதில் தானே திரும்பினார் என்று கூறி வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

வைரலாகும் வீடியோவை புகைப்படங்களாக பிரித்து தேடியதில், வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வானது மத்திய அரசு 2020-ல் வெளியிட்ட 3 புதிய வேளாண் சட்டங்களின் பிரச்சனைகள் குறித்து 2021 ஜனவரியில் காங்கிரஸ் சார்பில் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டபோது நடந்த நிகழ்வு என்று அறிய முடிந்தது.

ராகுல் காந்தி புத்தகத்தை திருப்புவதற்கு பதில் தானே திரும்பினார் என்று பரவும் வீடியோத் தகவல்
Screengrab from inc.in

தொடர்ந்து தேடியதில் வைரலாகும் வீடியோவின் முழுப்பகுதி காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை காண முடிந்தது. அவ்வீடியோவின் 2:21 நேரத்தில், “பாருங்கள்! நாங்கள் எவ்வளவு நியாயமாக இருக்கின்றோம். இப்படியும் காட்டுகின்றோம், அப்படியும் காட்டுகின்றோம். இதுவே பாஜகவாக இருந்திருந்தால் இதுபோல் காட்டிருப்பார்கள்…” என்று கூறிக்கொண்டே ராகுல்காந்தி திரும்புவதை காண முடிகின்றது.

இதனடிப்படையில் பார்க்கையில் ராகுல்காந்தி பாஜக குறித்து பேசும் இடத்தில் ஆடியோவை மாற்றி, ராகுல்காந்தி புத்தகத்தை திருப்புவதற்கு பதில் தானே திரும்பியதாக தவறான தகவல் ஒன்று திரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது என அறிய முடிகின்றது.

Also Read: டெல்லி அரசு பள்ளியில் பாரத மாதாவின் கிரீடத்தை கழற்றிவிட்டு மாணவர்களுக்கு நமாஸ் கற்பிக்கப்படுகிறதா?

Conclusion

ராகுல் காந்தி புத்தகத்தை திருப்புவதற்கு பதில் தானே திரும்பினார் என்று பரவும் வீடியோத் தகவல் தவறானது என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
INC Official Website

Youtube Video from INC

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular