சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024
சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

HomeFact Checkராகுல் காந்தி தனது பெயரில் காந்தியை நீக்கி ‘ராகுல் ராஜீவ் ஃபெரோஸ்' என குறிப்பிட்டதாக பரவும்...

ராகுல் காந்தி தனது பெயரில் காந்தியை நீக்கி ‘ராகுல் ராஜீவ் ஃபெரோஸ்’ என குறிப்பிட்டதாக பரவும் எடிட் செய்யப்பட்ட படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ராகுல் காந்தி தனது பெயரில் காந்தியை நீக்கி ‘ராகுல் ராஜீவ் ஃபெரோஸ்’ என பயன்படுத்தினார்.

Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.

“நம்ம வூர்லதான் காந்தி வேசம்! வெளி நாடு வந்தா ராகுல் ராஜிவ் பெஃரோஸ்னு ஒரிஜினல் பேர்தான் வச்சிப்பாரு நம்ம தலைவரு” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில்  பரவி வருகின்றது.

ராகுல் காந்தி தனது பெயரில் காந்தியை நீக்கி ராகுல் ராஜீவ் ஃபெரோஸ் என தன் பெயரை பயன்படுத்தியதாக பரவும் புகைப்படம்
Screengrab from Twitter@senthilkumarpcm
ராகுல் காந்தி தனது பெயரில் காந்தியை நீக்கி ‘ராகுல் ராஜீவ் ஃபெரோஸ்’ என தன் பெயரை பயன்படுத்தியதாக பரவும் புகைப்படம்
Screengrab from Facebook/Chandramouli786
ராகுல் காந்தி தனது பெயரில் காந்தியை நீக்கி ‘ராகுல் ராஜீவ் ஃபெரோஸ்’ என தன் பெயரை பயன்படுத்தியதாக பரவும் புகைப்படம்
Screengrab from Facebook/Raj Kumar B

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: இந்திய இறையாண்மைக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ!

Factcheck / Verification

ராகுல் காந்தி தனது பெயரில் காந்தியை நீக்கி ‘ராகுல் ராஜீவ் ஃபெரோஸ்’ என தன் பெயரை பயன்படுத்தியதாக வைரலாகும் புகைப்படததை கூர்மையாக உற்று நோக்கியதில், அப்படத்தில் காணப்படும் பெயர் பலகையில், ‘Rahul Rajiv Feroz – Gold From potato expert wayanad Kerala’ (ராகுல் ராஜீவ் ஃபெரோஸ் – கேரளா வயநாட்டிலிருக்கும் உருளைக்கிழக்கு நிபுணர்களிடம் இருந்து வந்த தங்கம்) என குறிப்பிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

ராகுல் காந்தி தனது பெயரில் காந்தியை நீக்கி ‘ராகுல் ராஜீவ் ஃபெரோஸ்’ என தன் பெயரை பயன்படுத்தியதாக பரவும் புகைப்படம்

இதை வைத்து பார்க்கும்போதே இதை கேலிக்காக யாரோ வேண்டுமென்று எடிட் செய்துள்ளனர் என்பதை அறிய முடிந்தது. இருப்பினும் பலர் இப்படத்தை உண்மை என்று நம்பி பகிர்ந்து வருவதால் இதை முறையாக ஆய்வு செய்து தெளிவுப்படுத்த முடிவு செய்தோம்.

எனவே வைரலாகும் படத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தனமை குறித்து தேடினோம். இத்தேடலில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவர் சாம் பித்ரோதா ராகுல்காந்தி கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உரையாற்றியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

அப்படங்களில் ஒன்றாக வைரலாகும்  படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால் அப்படத்தில் இடம்பெற்றிருந்த பெயர் பலகையில் பெயர் ஏதும் குறிப்பிடாமல் வெறுமையாக இருப்பதை காண முடிந்தது.

அந்த வெறுமையான பெயர் பலகையில் ‘Rahul Rajiv Feroz – Gold From potato expert wayanad Kerala’ என்ற வாசகம் சேர்க்கப்பட்டு வைரலாகும் படம் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: Fact check: பாஜக சமூக ஊடகப் பிரிவுத் தலைவராக சவுக்கு சங்கர் நியமிக்கப்பட்டுள்ளாரா?

Conclusion

ராகுல் காந்தி தனது பெயரில் காந்தியை நீக்கி ‘ராகுல் ராஜீவ் ஃபெரோஸ்’ என தன் பெயரை பயன்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Sources

Tweet from @sampitroda dated March 1, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular