Fact Check
ராஜீவ் காந்திக்கு பதிலாக ராகுல் காந்தி படத்துக்கு அஞ்சலி செலுத்தினரா வயநாடு காங்கிரஸார்?
Claim
வயநாடு காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் ராஜீவ் காந்தி நினைவு நாளில் ராஜீவ் காந்திக்கு பதிலாக ராகுல் காந்தி படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

சமூக ஊடகங்களில் வந்த இப்பதிவை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: காந்தி சமாதியின் மீது வீசப்பட்டிருந்த நாணயத்தை ராகுல் காந்தி திருடினாரா?
Fact
வயநாடு காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் ராஜீவ் காந்தி நினைவு நாளில் ராஜீவ் காந்திக்கு பதிலாக ராகுல் காந்தி படத்தை வைத்து அஞ்சலி செலுத்தியதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதில் இப்படம் மூன்று வருடங்களுக்கு முன்பே சமூக ஊடகங்களில் பரவியதை அறிய முடிந்தது.

இதனையடுத்து இப்படம் குறித்து தொடர்ந்து ஆராய்கையில் அப்படத்தில் குத்து விளக்கு ஏற்றுபவர் திருவனந்தபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளர் வினோத் சென் என அறிய முடிந்தது. இத்தகவலை இவரின் ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் உறுதி செய்து கொண்டோம்.

இதனை தொடர்ந்து வினோத்தை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு பேசினோம். வைரலாகும் படத்திலிருப்பவர் அவர்தான் என அவர் உறுதி செய்தார்.
”இப்படம் திருவனந்தபுரத்தின் நெய்யட்டிங்கரா தொகுதியில் எடுக்கப்பட்டது. இப்படத்தில் நானும் எஸ்.கே அஷோக் குமாரும் உள்ளோம். நான் திருவனந்தபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளராக உள்ளேன். இப்படம் எடுக்கும்போது அஷோக் குமார் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்தார். இதன் உண்மையான படம் தற்போது என்னிடம் இல்லை” என வினோத் சென் நம்மிடம் கூறினார்.
வினோத் சென் தொடர்ந்து பேசுகையில், “இப்படம் எடுத்து குறைந்தது ஐந்து வருடங்களுக்கு மேல் இருக்கும். திருப்புரம் விவசாயிகள் காங்கிரஸ் அணியை சார்ந்தவர்கள் திருப்புரம் பஞ்சாயத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடினர். பண்டிகையின் ஒரு பகுதியாக ஓணம் சந்தை தொடங்கப்பட்டது. அச்சமயத்திலியே இப்படம் எடுக்கப்பட்டது. இப்படத்தில் குத்து விளக்கு ஏற்றுவது நான்தான். ஓணம் மார்க்கெட்டை அஷோக் குமார் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அவருக்குபின் நானும் குத்து விளக்கு ஏற்றினேன். திருப்புரம் விவசாயிகள் காங்கிரஸின் தலைவராக இருந்த மித்ரம் லாலுதான் ராகுல் காந்தியின் படத்தை கொண்டு வந்து அங்கே வைத்தார். அவர் ராகுலின் தீவிர தொண்டராக இருந்தார்” என்று கூறினார்.
Also Read: ஆப்கானிஸ்தான் மலைத்தொடரில் அமைந்துள்ள சிவன் கோயில் என்று பரவும் புகைப்படச்செய்தி உண்மையா?
கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகுவது யாதெனில்,
- வைரலாகும் படம் அண்மையில் ராஜீவ் காந்தி நினைவு தினத்தில் எடுக்கப்படவில்லை; ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஓணம் பண்டிகை விழா ஒன்றில் எடுக்கப்பட்டுள்ளது.
- அதேபோல் இப்படத்தில் காணப்படும் சம்பவம் வயநாடு பகுதியில் நடக்கவில்லை; திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது
Sources
Post from Reddit
Quote from Vinod Sen, Thiruvananthapuram DCC General Secretary
Facebook Profile of Vinod Sen