Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ராஜ்காட்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை பாதுகாக்க தவறுதலாக பிச்சைக்காரர் ஒருவரை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படையினர் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமீபத்தில் பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, அங்கு பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் திரும்பியதன் பின்னணியில் பல்வேறு சர்ச்சைகள் உலா வருகின்றன.
பிரதமருக்காக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாகவே பஞ்சாப்பில் இருந்து பாதியில் திரும்பியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமருக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் போர்க்கொடி தூக்கியதாகவும் பாஜக ஆதரவு செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்னொரு பக்கம், கூட்டத்தில் கலந்து கொள்ள மக்களோ, பாஜக தொண்டர்களோ வராததே அவர் பாதி வழியில் திரும்பியதற்கான காரணம் என்கிற செய்தியும் உலா வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமரான மறைந்த ராஜீவ் காந்தி குறித்து, “ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது ராஜ்காட் செல்கிறார்! அங்கே புதர்களில் ஒருவித அசைவுகள்! உடனே சப்தம் வந்த இடத்தை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு! கொல்லப்பட்டது யாரெனில் வழக்கமாக அந்த காந்தி சமாதியில் உறங்கும் பிச்சைக்காரன்! இந்த நிலையை பஞ்சாப்பில் கொண்டு வர விரும்பாமல் பிரதமர் மோடிஜி தலைநகர் திரும்பினார்!” என்பதாக வீடியோவுடன் கூடிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நியாய விலைக் கடையில் பொருள் வாங்குவது ‘பிச்சை’ எடுப்பதற்கு சமம் என்றாரா சீமான்?
ராஜ்காட்டில் ராஜீவ் காந்தியைப் பாதுகாக்க தவறுதலாக பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிச்சைக்காரர் என்கிற வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் அதன் பின்னணி தகவல் குறித்த அறிய குறிப்பிட்ட வீடியோவில் உள்ள இமேஜ்களைப் பிரித்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச்சுக்கு உள்ளாக்கினோம். மேலும், குறிப்பிட்ட வீடியோவில் இடம்பெற்றுள்ள AP என்கிற லோகோவையும் ரிவர்ஸ் சர்ச் தேடலுக்கு உள்ளாக்கினோம். ராஜ்காட்டில் உண்மையிலேயே பிச்சைக்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டாரா என்பது குறித்த தேடுதலில் இறங்கினோம்.
அதன் முடிவில், கடந்த அக்டோபர் 4, 2018 ஆம் ஆண்டு AP Archive வெளியிட்டுள்ள குறிப்பிட்ட 1.58 நிமிட வீடியோவே வைரல் செய்யப்படுகிறது என்பது நமக்குத் தெரிய வந்தது.
குறிப்பிட்ட வீடியோ தொடர்பான உண்மையான செய்தி என்னவென்றால், 1986 ஆம் ஆண்டு, அன்றைய பிரதமரான ராஜீவ் காந்தி ராஜ்காட்டில் நடைபெற்ற மறைந்த தேசப்பிதா மகாத்மா காந்தியின் 117வது பிறந்தநாள் ஆண்டு விழாவில் கலந்து கொள்ளச் சென்றபோது, அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, செடிகள் படந்திருந்த நிழற்குடை திறந்தவெளி மண்டபத்தின் மேற்பகுதியில் (Vine covered gazebo) மறைந்திருந்த சீக்கிய மதத்தைச் சேர்ந்த கரம்ஜித் சிங் என்பவர் சுற்றி வளைத்துப் பிடிக்கப்பட்டார். இச்சம்பவத்தில், 3 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் 3 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர் என்று லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட சம்பவம் குறித்த முழு செய்தியையும் அக்டோபர் 31, 1986 அன்று இந்தியா டுடே நாளிதழ் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு அச்செய்தி மறுபதிப்பும் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அக்குறிப்பிட்ட நிகழ்வில், ராஜீவ் காந்தியை கொல்ல முயற்சித்து கைது செய்யப்பட்ட கரம்ஜித் சிங்கின் பேட்டி லிவ்விங் இந்தியா நியூஸ் என்கிற செய்தி சேனலில் ஐந்து வருடங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2020, பிப்ரவரி மாதம் Daily post Punjabi என்கிற சேனலிலும் அவரது பேட்டி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம், அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியை சுட்டுக் கொல்ல முயன்ற நபர் உயிருடன் இருக்கிறார் என்பதும், அச்சம்பவத்தில் யாரும் கொல்லப்படவில்லை என்பதும் உறுதியாகிறது.
ராஜ்காட்டில் ராஜீவ் காந்தியைப் பாதுகாக்க தவறுதலாக பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிச்சைக்காரர் என்கிற வீடியோ தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Sabloo Thomas
May 27, 2025
Ramkumar Kaliamurthy
May 27, 2025
Ramkumar Kaliamurthy
May 24, 2025