Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: இந்திரா காந்தியின் இறுதிச்சடங்கில் ராஜீவும் ராகுலும் கல்மா ஓதினார்கள்.
Fact: வைரலாகும் படத்திலிருப்பது இந்திரா காந்தி இறுதிச்சடங்கு அல்ல; பாகிஸ்தான் தலைவர் அப்துல் கஃபார் கானின் இறுதிச் சடங்காகும்.
“இந்த புகைப்படம் மிகவும் சிரமத்துடன் கண்டுபிடிக்கப்பட்டது. *இந்திராவின் பிணத்தின் முன் ராகுலும் ராஜீவ் காந்தியும் கல்மா ஓதுகிறார்கள், ஆனாலும் இவர்களை இந்துக்கள் என்றுதான் நம் நாட்டு மக்கள் நினைக்கிறார்கள்” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில்
பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ஆகஸ்ட் 18 முதல் 20 வரை விண்ணப்பிக்கலாமா?
இந்திரா காந்தியின் இறுதிச்சடங்கில் ராஜீவ் காந்தியும் ராகுல் காந்தியும் கல்மா ஓதியதாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து அப்படம் குறித்து தேடினோம்.
இத்தேடலில் பாகிஸ்தானின் தேசிய ஜனநாயக இயக்கத்தின் (National Democratic Movement – NDM) தலைவர் மோசின் தாவர் வைரலாகும் இதே படத்தை அவர் எக்ஸ் பக்கத்தில் ஜனவரி 27, 2016 அன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
அப்பதிவில் பச்சா கான் என்றழைக்கப்படும் அப்துல் கஃபார் கானின் இறுதிச்சடங்கில் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, மற்றும் நரசிம்ம ராவ் கலந்துக்கொண்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
அப்துல் கஃபார் கான் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரராவார். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின் அவர் பாகிஸ்தானில் குடியேறியுள்ளார்.
தொடர்ந்து தேடுகையில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் குலாம் அப்பாஸ் ஷா ஜனவரி 20, 1988 அன்று ராஜீவ காந்தி அப்துல் கஃபாரின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொள்ள பாகிஸ்தானின் பெஷாவர் பகுதிக்கு வந்ததாக கூறி வீடியோ ஒன்றை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்ததை காண முடிந்தது.
இவ்வீடியோவில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் காட்சியும் இடம்பெற்றிந்தது.
இதனடிப்படையில் பார்க்கையில் ராஜீவ் காந்தியும் ராகுல் காந்தியும் இஸ்லாமிய முறைப்படி வணங்கும் படம் இந்திரா காந்தியின் இறுதிச்சடங்கில் எடுக்கப்பட்டதல்ல; இஸ்லாமியரான அப்துல் கஃபார் கானின் இறுதிச்சங்கில் எடுக்கப்பட்டது என்பது தெளிவாகின்றது.
Also Read: தர்மபுரி தொப்பூர் கணவாயில் கோர விபத்து என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
இந்திரா காந்தியின் இறுதிச்சடங்கில் ராஜீவ் காந்தியும் ராகுல் காந்தியும் கல்மா ஓதியதாக பரப்பப்படும் புகைப்படத்தகவல் தவறானதாகும். அப்படமானது பாகிஸ்தான் தலைவர் அப்துல் கஃபார் கானின் இறுதிச்சங்கில் எடுக்கப்பட்டதாகும்.
இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
X Post By Mohsin Dawar, Central Chairman, National Democratic Movement, Dated January 27, 2016
X Post By Ghulam Abbas Shah, Broadcast journalist, Dated October 01, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Sabloo Thomas
May 27, 2025
Ramkumar Kaliamurthy
May 27, 2025
Ramkumar Kaliamurthy
May 24, 2025