Fact Check
கரூர் வழக்கில் A4 குற்றவாளியாக ராஜ்மோகன் சேர்ப்பு என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
Claim
கரூர் வழக்கில் A4 குற்றவாளியாக ராஜ்மோகன் சேர்ப்பு
Fact
வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டு பரவுகிறது.
கரூர் வழக்கில் A4 குற்றவாளியாக ராஜ்மோகன் சேர்ப்பு என்பதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் மாவட்ட செயலாளர் மதியழகன், புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் பெயர்களைத் தொடர்ந்து தவெக துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் பெயரும் A4 ஆக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல். ஆதவ் அர்ஜூனன் பெயர் இல்லாததால், அவர் பாஜகவிடம் விலை போய்விட்டார் என்று தவெகவினர் விமர்சனம்.” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தவெக தலைவர் விஜய் பனையூரில் பதுங்கியதாக விமர்சனம் செய்தாரா நடிகர் சூரி?
Fact Check/Verification
கரூர் வழக்கில் A4 குற்றவாளியாக ராஜ்மோகன் சேர்ப்பு என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை வெளியிட்டதாகப் பரவும் நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தோம். அக்டோபர் 24ஆம் தேதியன்று அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் இந்த ”நியூஸ்கார்ட் போலியானது” என்று விளக்கமளித்துள்ளனர்.

தொடர்ந்து, கரூர் வழக்கு குறித்த செய்திகளை ஆராய்ந்தபோது சிபிஐ தரப்பில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தாலும் அதன் சாரம்சம் குறித்த விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேற்கண்ட நியூஸ்கார்ட் போலியானது என்பதை மேலும் உறுதிப்படுத்த இதுகுறித்து புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று உறுதிப்படுத்தினார்.
Also Read: விஜய் திரிஷாவுடன் தீபாவளி கொண்டாடியதாக பரவும் படம் உண்மையானதா?
Conclusion
கரூர் வழக்கில் A4 குற்றவாளியாக ராஜ்மோகன் சேர்ப்பு என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Puthiyathalaimurai Website post, Dated October 24, 2025
Phone Conversation with, Ivani, Puthiyathalaimurai, Dated October 27, 2025