ராமர் சேது பாலத்தில் நடக்கும் ஸ்கூபா டைவர்ஸ் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“இந்து மதமே இல்லைனு சொல்றவங்க .ராமாயணம் ஒரு கட்டுக்கதைனு சொல்றவங்களுக்கு இது சமர்ப்பணம்.” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அன்புமணி தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா சி வோட்டர்?
Fact Check/Verification
ராமர் சேது பாலத்தில் நடக்கும் ஸ்கூபா டைவர்ஸ் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து மேலும் Ram Setu, ராமர் பாலம் உள்ளிட்ட கீ-வேர்டுகளும் உபயோகித்து தேடியபோது Jay Prints என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதேபோன்ற வீடியோ ஒன்று இடம்பெற்றிருந்தது.
“Ram Setu Reimagined: A Sacred Bridge Beneath the Waves “ என்கிற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ பதிவின் கீழேயே ” All visuals shown here are AI-generated and meant purely for artistic and educational purposes. We deeply respect all beliefs and traditions – this reel is intended to inspire wonder, not offend.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த வீடியோ காட்சிகள் வைரலாகும் வீடியோவில் இருந்து சற்றே வேறுபட்டதால் குறிப்பிட்ட வைரல் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து தேடியபோது கடந்த மார்ச் 27ஆம் தேதியன்று bhrathfx1 என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் வீடியோ இடம்பெற்றிருந்தது.

அதிலும், “The images/videos shown in this reel are purely AI generated, our intentions are not to hurt or harm anyone. This is just for entertainment purpose.” என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட வீடியோவே தற்போது ராமர் சேது பாலத்தின் உண்மையான வீடியோ என்பதாக வைரலாகிறது.
lso Read: தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர்வார் என பரவும் செய்தி வீடியோ தற்போதையதா?
Conclusion
ராமர் சேது பாலத்தில் நடக்கும் ஸ்கூபா டைவர்ஸ் என்று பரவும் வீடியோ AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post From, Bharatfx1, Dated March 27, 2025
Instagram Post From, Jayprints, Dated April 05, 2025