Fact Check
ரங்கராஜ் பாண்டே சிறுவயதில் ஆர்.எஸ்.எஸ். சீருடையுடன் இருப்பதாக வதந்தி
மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே அவர்கள் சிறுவயதில் ஆர்.எஸ்.எஸ். சீருடையுடன் கையில் கைத்துப்பாக்கியுடன் இருப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

மூத்த பத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகருமான ரங்கராஜ் பாண்டே குறித்து பலவிதமான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பரவி வருகின்றது. இவர் ஒரு பாஜக சார்பாளர், ஆர்.எஸ்.எஸ். கைக்கூலி என இவர்மேல் தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். சீருடையுடன் கையில் கைத்துப்பாக்கியுடன் காட்சியளிக்கும் ஒரு நபரின் புகைப்படத்தை பகிர்ந்து, அப்படத்தில் இருப்பவர் சிறுவயது ரங்கராஜ் பாண்டே என்று கூறி சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று தற்போது பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
ரங்கராஜ் பாண்டே அவர்கள் ஆர்.எஸ்.எஸ். சீருடையுடன் கையில் கைத்துப்பாக்கியுடன் காட்சியளிப்பதாக ஒரு படம் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொர்ந்து, இதன் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மை குறித்து அறிய இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
நம் ஆய்வில் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறான ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது. ரங்கராஜ் பாண்டே அவர்களே இத்தகவலை மறுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில்,
நாம் ஏதோ எழுதிக்கொண்டிருக்க, இணையத்தில் சில நண்பர்கள் வேறு ஏதோ படம் காட்டி விவாதித்துக் கொண்டிருக்கிறார்களே என வியந்தேன்.
அது, ‘பயங்கரவாதி பாண்டே’வின் படமாம். அதுவும் சின்ன வயதில் எடுத்த படமாம். பார்ப்பதற்கு, என்னைப் போலவா இருக்கிறது? யார் பெற்ற பிள்ளையோ, என் பெயரால் ஏச்சு வாங்கிக்கொண்டிருக்கிறது.
தினந்தோறும் டிவியில் பார்க்கும் பாண்டேவுக்கும், இந்தப் படத்துக்கும் ஆறு ஒற்றுமையாவது கண்டுபிடிப்பவர்களுக்கு, ஆயிரம் பொற்காசுகள் கிடைக்க வாழ்த்துகிறேன்.
இந்தப் படம் பரப்பும் நண்பர்களுக்கும், அதன் மூலம் என் புகழ் பரப்பும் அன்பர்களுக்கும் சொல்லிக்கொள்ள ஒன்றே ஒன்று தான் இருக்கிறது:
எப்படம் யார்யார்கண் பார்ப்பினும் அப்படம்
மெய்ப்படம் காண்ப தறிவு
என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் காணும்போது சமூக வலைத்தளங்களில் ரங்கராஜ் பாண்டேவின் சிறுவயது படம் என்று வைரலாகும் படம் தவறானது என்பது தெளிவாகின்றது.
Conclusion
மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே அவர்கள் சிறுவயதில் ஆர்.எஸ்.எஸ். சீருடையுடன் கையில் துப்பாக்கியுடன் காட்சியளிப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படம் தவறான புகைப்படம் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Rangaraj Pandey’s Facebook Post
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)