இந்திய கரன்சி ரூபாயை ரூ’இந்து’ என மாற்ற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக டிவீட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்திய நாணயம் ரூ”பாய்” னு இருப்பதை ரு”இந்து” னு மாற்ற வேண்டும்! என்று அர்ஜூன் சம்பத் டிவீட் செய்ததாத ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இதனை பலரும் பகிர்ந்து இதுகுறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.


Also Read: வீடு மற்றும் கடை வாடகைக்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
இந்திய கரன்சி ரூபாயை ரூ’இந்து’ என மாற்ற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக வைரலாகும் டிவீட் ஸ்க்ரீன்ஷாட்டின் உண்மைத்தன்மை குறித்து அறிய டிவிட்டர் அட்வான்ஸ்ட் சர்ச் (Twitter Advanced Search) முறையை பயன்படுத்தி வைரலாகும் டிவீட் குறித்து தேடினோம்.
இவ்வாறு தேடியதில் அர்ஜூன் சம்பத் பதிவிட்டதாக வைரலாகும் டிவீட் ஸ்க்ரீன்ஷாட்டின் பின்புலத்தில் இருந்த உண்மைத்தன்மை நமக்கு தெளிவாகியது.
உண்மையில் அர்ஜூன் சம்பத் பதிவிட்டதாக வைரலாகும் டிவீட் அர்ஜூன் சம்பத் பதிவிட்டதே அல்ல; அது அர்ஜூன் சம்பத் பெயரில் இயங்கும் போலிக் கணக்கிலிருந்து பதிவிட்டதாகும்.
அர்ஜூன் சம்பத் அவர்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கின் ஐடி @imkarjunsampath என்பதாகும். ஆனால் வைரலாகும் டிவீட் @Arjun_sampath_ என்கிற ஐடியிலிருந்து பதிவிடப்பட்டுள்ளது.

வைரலாகும் டிவீட்டை பதிவு செய்த கணக்கை ஆய்வு செய்கையில் இதற்கு முன்பு இதேபோல் வேடிக்கையாக பல டிவீட்டுகளை பதிவு செய்திருந்ததை காண முடிந்தது.
இதேபோல் இந்த கணக்கின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த அர்ஜூன் சம்பத்தின் படத்தில் மரு வைக்கப்பட்டிருந்தது, மற்றொரு படத்தில் போர்ன் நடிகர் ஜானி சின்ஸ் இடம்பெற்றிருந்தார். அதேபோல் லொக்கேஷன் குறிப்பிடும் பகுதியில் கோயம்புத்தூர் என்பதற்கு பதில் ‘கோமியபுத்தூர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் பார்க்கும்போது யாரோ ஒருவர் அர்ஜூன் சம்பத் பெயரில் போலியாக டிவிட்டர் கணக்கை தொடங்கி பதிவுகள் பதிவிட்டு வருகின்றார் என்பது தெளிவாகின்றது.
வாசகர்களின் புரிதலுக்காக அர்ஜூன் சம்பத் அவர்களின் உண்மையான டிவிட்டர் கணக்கையும், அவர் பெயரில் இயங்கும் போலி கணக்கையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
Conclusion

Also Read: பாஜகவின் அதிகாரப்பூர்வ ஊடகமானதா விகடன்?
Conclusion
இந்திய கரன்சி ரூபாயை ரூ’இந்து’ என மாற்ற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் டிவீட் செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் ஸ்க்ரீன்ஷாட் உண்மையில் அவர் பெயரில் இயங்கும் போலிக் கணக்கில் பதிவிடப்பட்டது என்பதை கிடைத்த ஆதாரங்களின் மூலம் தெளிவாகின்றது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Imposter
Source
Newschecker Reasearch
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)