Authors
Claim: ராமர் படத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு
Fact: வைரலாகும் ராமர் படத்துடன் கூடிய 500 ரூபாய் நோட்டு வெளியிடப்படுவதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகியிருக்கவில்லை.
ராமர் படம் இடம்பெறும் புதிய 500 ரூபாய் நோட்டை வெளியிடும் ரிசர்வ் வங்கி என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“புதிய 500 ரூபாய் நோட்டு” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அயோத்தி ராமர் கோவில் என்று பரவும் தவறான வீடியோ!
Fact Check/Verification
ராமர் படம் இடம்பெறும் புதிய 500 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட இருப்பதாக பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படம் குறித்த உண்மையறிய அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு அன்று இவ்வாறு புதிய 500 ரூபாய் நோட்டு வெளியிடப்படுவதாக செய்தி ஏதேனும் பிரதமரது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்திலோ அல்லது PIB பக்கத்திலோ இடம்பெற்றிருக்கிறதா என்று தேடியபோது அவ்வாறு எந்த செய்தியும் இடம்பெறவில்லை.
தொடர்ந்து, ரிசர்வ் பேங்கின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்திலோ, அவர்களுடைய இணையதளத்திலோ புதிய 500 ரூபாய் நோட்டு குறித்த தகவல் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.
மேலும், அவர்களுடைய “know your notes” பகுதியில் தற்போது புழக்கத்தில் இருக்கும் அனைத்து நோட்டுகளைப் பற்றிய தகவல்களும் இடம்பெற்றிருக்கும் பகுதியில் தேடியபோதும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் குறித்த எந்த தகவலும் இடம்பெற்றிருக்கவில்லை. எனவே, ராமர் படம் இடம்பெற்ற புதிய 500 ரூபாய் நோட்டுகள் என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.
Also Read: அயோத்தி ராமர் கோயிலுக்கு நேபாளத்தில் இருந்து சீர்வரிசை என்று பரவும் நொய்டா வீடியோ!
Conclusion
ராமர் படம் இடம்பெறும் புதிய 500 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட இருப்பதாக பரவும் புகைப்படம் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
1. Information given on the official website of RBI.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)