Fact Check
ATM கட்டணம் ₹2லிருந்து ₹23ஆக உயர்த்தப்பட உள்ளதாக தந்தி தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி உண்மையா?
Claim
ATM கட்டணம் ₹2லிருந்து ₹23ஆக உயர்த்தப்பட உள்ளது.

தந்தி தொலைக்காட்சி வெளியிட்ட பதிவை இங்கே காணலாம்.
Also Read: அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்றாரா செம்மலை?
Fact
வரையறுக்கப்பட்ட இலவசப் பரிவர்த்தனைகளுக்கு பிறகு வசூலிக்கப்படும் ATM கட்டணம் ₹2லிருந்து ₹23ஆக உயர்த்தப்பட உள்ளதாக தந்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
இத்தேடலில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு ஒன்றை நம்மால் காண முடிந்தது. அந்த அறிவிப்பில், வரையறுக்கப்பட்ட இலவசப் பரிவர்த்தனைகளுக்கு ( மெட்ரோ நகரங்களுக்கு 3 பரிவர்த்தனைகள்/ மெட்ரோ அல்லாத நகரங்களுக்கு 5 பரிவர்த்தனைகள்) பிறகு நடத்தப்படும் ATM பரிவர்த்தனைகளுக்கு ₹23 வரை கட்டணம் வசூலிக்கப்படலாம். இந்த உத்தரவானது மே 01, 2025 முதல் அமலுக்கு வருகின்றது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தற்போது இக்கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படுகின்றது என்று தேடினோம். இத்தேடலில் அனைத்து வங்கிகளிலும் சராசரியாக ₹21 வரை இக்கட்டணம் வசூலிக்கப்படுவதை அறிய முடிந்தது.
இந்தியன் வங்கி, எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிங் வங்கி உள்ளிட்ட வங்ககளின் இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வழியாக இதை அறிந்து கொண்டோம்.




இதன்படி பார்க்கையில் ATM கட்டணமானது ₹2 உயர்த்தப்படவிருக்கின்றது என அறிய முடிகின்றது. அதாவது ₹21லிருந்து ₹23ஆக உயர்த்தப்படவிருக்கின்றது.
ஆகவே ATM கட்டணம் ₹2லிருந்து ₹23ஆக உயர்த்தப்பட உள்ளதாக தந்தி தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி தவறானது என உறுதியாகின்றது.
Also Read: அதிமுக என்னும் பேரியக்கம் கொள்கையில் இருந்து விலகுவது மனதை ரணமாக்குகிறது என்றாரா அன்வர் ராஜா?
Sources
Circular from RBI Website
Indian Bank Website
SBI Website
HDFC Website
Axis Bank Website