Claim
நடிகர் விஜய் நடிப்பில் வரவிருக்கும் திரைப்படம் லியோ. இத்திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி இம்மாதம் 30 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளப்பட்டதாகவும் தகவல் ஒன்றை சமூக ஊடக பிரபலம் சவுக்கு சங்கர் அவரது டிவிட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
லியோ திரைப்படத்தின் சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு பகுதிகளின் விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ்க்கு தந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளரை மிரட்டுவதாகவும் இத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: கனடா நாட்டை எதிர்த்து கனரா வங்கி முன் பாஜகவினர் போரட்டம் நடத்தியதாக பரவும் பொய் தகவல்!
Fact
லியோ தயாரிப்பாளரை ரெட் ஜெயண்ட் நிறுவனம் மிரட்டுவதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வில் இத்தகவல் தவறானது என்பதை அறிய முடிந்தது. லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ இத்தகவல் தவறானது என்று X தளத்தில் தெளிவு செய்து பதிவு ஒன்றை வெளியிட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.
Result: False
Our Sources
X post from Seven Screen Studio, Dated September 23, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)