ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkலியோ திரைப்படத்திலிருந்து லோகேஷ் கனகராஜ் விலகியதாக பரவும் போலி நியூஸ்கார்டு!

லியோ திரைப்படத்திலிருந்து லோகேஷ் கனகராஜ் விலகியதாக பரவும் போலி நியூஸ்கார்டு!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: லியோ திரைப்படத்திலிருந்து லோகேஷ் கனகராஜ் விலகல்

Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று சினிமா விகடன் தெளிவு செய்துள்ளது.

“லோகேஷ் இயக்கத்தில் விஜய் திரிஷா இணைந்து நடிக்கும் படம் லியோ. சமீபத்தில் லியோ படப்பிடிப்பின்போது நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷிடம் படத்தில் திரிஷாவுடன் ரொமான்ஸ் காட்சிகளும், படத்தில் ஒரு டூயட் சாங்கும் வேண்டும் என்று கூறியுள்ளார். கோபமடைந்த லோகேஷ் படத்தில் இருந்து விலகியதாகவும் படத்தின் 70 சதவீதம் குலுகுலு இயக்குனர் ரத்னா இயக்கி உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

லியோ திரைப்படத்திலிருந்து லோகேஷ் கனகராஜ் விலகியதாக பரவும் நியூஸ்கார்டு

X Link | Archived Link

லியோ திரைப்படத்திலிருந்து லோகேஷ் கனகராஜ் விலகியதாக பரவும் நியூஸ்கார்டு

Archived Link

லியோ திரைப்படத்திலிருந்து லோகேஷ் கனகராஜ் விலகியதாக பரவும் நியூஸ்கார்டு

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாஜகவின் பொய்யால் குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.7.5 கோடியை இழந்த நபர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check/Verification

லியோ திரைப்படத்திலிருந்து லோகேஷ் கனகராஜ் விலகியதாக நியூஸ்கார்டு வைரலானதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் சமூக ஊடகப் பக்கங்களில் இதுக்குறித்த அறிவிப்பு ஏதேனும் உள்ளதா என தேடினோம்.

இத்தேடலில் இதுக்குறித்த எந்த அறிவிப்பும் நமக்கு கிடைக்கவில்லை.

மாறாக கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதியே லியோ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக  லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. ‘6 மாதத்திற்குள் 125 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்படத்திற்காக உழைப்பை தந்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி’ என்று அப்பதிவில் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் அண்மையில், லியோ வெளியான பிறகு  உங்களுடன் சேர்ந்து பார்க்க விரும்புகிறேன், உங்களின் கருத்தையும் அறிய விரும்புகிறேன் என்று நடிகர் ஷாருக் கானிடம் விண்ணப்பம் வைத்து லோகேஷ் கனகராஜ் டிவீட் செய்திருப்பதையும் காண முடிந்தது.

இதனடிப்படையில் காண்கையில் லியோ படத்திலிருந்து லோகேஷ் கனகராஜ் பாதியில் விலகியதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் தவறானது என்பது தெளிவாகின்றது.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது சினிமா விகடனின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில், இப்படி எந்த ஒரு செய்தியையும் விகடன் வெளியிடவில்லை!  என்று குறிப்பிட்டு வைரலாகும் இந்த நியூஸ்கார்ட் போலியானது என்று சினிமா விகடன் மறுப்பு தெரிவித்திருப்பதை காண முடிந்தது.

Also Read: இங்கிலாந்து அரச குடும்பத்துடன் இந்திய பிரதமர் மோடி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Conclusion

லியோ திரைப்படத்திலிருந்து லோகேஷ் கனகராஜ் விலகியதாக பரவும் நியூஸ்கார்டு போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X post from Lokesk Kanagraj, Cinema Director, Dated July 14, 2023
X post from Lokesk Kanagraj, Cinema Director, Dated September 06, 2023
X post from Cinema Vikatan, Dated September 11, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular