பதவியேற்றவுடன் டெல்லி முதல்வர் ரேகா குப்தா வாங்கிய விலையுயர்ந்த கார் என்று வீடியோ தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“முதலமைச்சராக பதவியேற்ற 48 மணி நேரத்தில் அதி நவீன சொகுசு கார் எப்படி வந்தது?? அதுவும் பேன்சி நம்பரோடு.. அதிகார துஷ்பிரயோகம் செய்யும் பாஜக.” என்று இந்த செய்தி பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தவெக தலைவர் விஜய் கையை தோள் மீதிருந்து தூக்கியெறிந்த மாணவி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Fact Check/Verification
பதவியேற்றவுடன் டெல்லி முதல்வர் ரேகா குப்தா வாங்கிய விலையுயர்ந்த கார் என்று பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
IANS வாட்டர்மார்க் குறிப்பிட்ட வீடியோ பதிவில் இடம்பெற்றுள்ள நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் “Delhi: CM security arrived to escort Rekha Gupta, for the official proceedings” என்கிற தலைப்பில் இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது.
மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது உபயோகித்த அதே வாகனத்தில் ரேகா குப்தா பதவியேற்பு விழாவிற்கு வரவிருப்பதாக ET Now செய்தி வெளியிட்டிருந்தது.
தொடர்ந்து, அந்த வாகனத்தின் பதிவு எண்ணான DL11CM0001 கொண்டு தேடியபோது கடந்த ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்காலத்தில் ஏப்ரல் 2022லேயே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாகியது.
முன்னாள் டெல்லி முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ வீடியோக்களை ஆராய்ந்தபோது அவர் இந்த காரையே உபயோகித்துள்ளார் என்பது உறுதியாகியது.
Also Read: சபதத்தை மறந்துவிட்டு காலில் செருப்பு அணிந்த அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Conclusion
பதவியேற்றவுடன் டெல்லி முதல்வர் ரேகா குப்தா வாங்கிய விலையுயர்ந்த கார் என்று பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video By ET NOW, Dated February 20, 2025
Cars24 Website
X Post By ANI, Dated February 9, 2025
X Post By ANI, Dated March 16, 2024
X Post By ANI, Dated September 14, 2024