டெல்லி புதிய முதல்வர் ரேகா குப்தாவின் பழைய காட்சி என்பதாக வீடியோ தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”டெல்லியின் பொறுப்பு இப்பொழுதுதான் ஒரு சரியான நபரிடம் சென்று சேர்ந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். கார்ய கர்த்தாவான ரேகா குப்தாவின் பழைய வீடியோ. இப்போது இவர்தான் டெல்லியின் முதலமைச்சர். இனி எல்லாமே சரியாக இருக்கும்” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: உ.பி.யில் குழந்தைப்பேறு பெறுவதற்காக பெண் ஒருவரை கை, கால்களை கட்டிபோட்டு சாக்கடையில் படுக்க வைத்ததாக பரவும் வீடியோத்தகவல் உண்மையானதா?
Fact Check/Verification
டெல்லி புதிய முதல்வர் ரேகா குப்தாவின் பழைய வீடியோ என்று பரவும் வீடியோ காட்சி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது Payal Jadav என்கிற நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ கடந்த பிப்ரவரி 19, 2025 அன்று இடம்பெற்றிருந்தது.

அதே உடையில் கடந்த 2023ஆம் ஆண்டே இவரது வேறு சில புகைப்படங்களும் அப்பக்கத்தில் இடம்பெற்றிருந்தது.
சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். நடிகையான பாயல், பிரபலமான காட்சித் தொடர் ஆன Manvat Murder-லும், வேறு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
Also Read: நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் சுலோச்சனா காலமானார் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Conclusion
டெல்லி புதிய முதல்வர் ரேகா குப்தாவின் பழைய வீடியோ என்று பரவும் தகவல் தவறானதாகும். அந்த வீடியோவில் இடம்பெற்றிருப்பவர் பாயல் என்கிற கலைஞர் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Video From, Payal Jadhav, Dated February 19, 2025
Instagram Post From, Payal Jadhav, Dated January 05, 2023