Authors
Claim: ஹரியானாவில் சாக்கடை நீரில் பிரியாணி செய்து விற்பனை செய்வதாகப் பரவும் வீடியோ தகவல்
Fact: வைரலாகும் வீடியோ தகவல் ஒரு வதந்தியாகும்.
இஸ்லாமியர் ஒருவர் ஹரியானாவில் சாக்கடை நீரில் பிரியாணி செய்து விற்பனை செய்து வந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”தயவு செய்து அரபி அடிமைகளின் கடையில் பிரியாணி மற்றும் பிற உணவுப் பொருட்களை வாங்கி தின்பதை அறவே நிறுத்துங்கள்அங்கு பிரியாணிகள் மற்றும் உணவுப் பொருட்கள் சாக்கடை நீரில் தயார் செய்யப்படுகிறது பொதுமக்கள் பிடித்த உடன் *50,000 ரூபாய் தருகிறேன் என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சுகிறான்” என்று இந்த வீடியோ வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மண..’ உலகின் சிறந்த தேசிய கீதமாக UNESCO – வால் அறிவிக்கப்பட்டதா?
Fact Check/Verification
இஸ்லாமியர் ஒருவர் ஹரியானாவில் சாக்கடை நீரில் பிரியாணி செய்து விற்பனை செய்வதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
இஸ்லாமியர் ஒருவர் சாக்கடை நீரில் பிரியாணி தயாரிப்பதாகப் பரவும் குறிப்பிட்ட வீடியோவை ஆராய்ந்து பார்த்தபோது அந்த உணவகத்தில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் குழாய் சாலை பகுதியில் இணைக்கப்பட்டிருந்ததே தவிர, உணவகத்தின் சமையல் அறை அல்லது பாத்திரங்களை சுத்தம் செய்யும் இடத்துடனோ இணைக்கப்பட்டிருக்கவில்லை.
ஜஸ்ட் டயல் மூலமாக குறிப்பிட்ட வீடியோவில் உள்ள உணவகத்தின் தொடர்பு எண்ணை தேடி அந்த உணவகம் ஷாமா பிரியாணி தாபா என்பதை அறிந்து கொண்டோம். அந்த உணவகத்தில் பணிபுரியும் யாசின் ரிஸ்வி என்பவரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, பரவும் வீடியோ தகவல் போலியானது என்று உறுதி செய்தார். “சாக்கடை நீரை நாங்கள் வெளியேற்றிதான் வருகிறோம்.” என்று உறுதி செய்தார்.
Pinjore காவல் நிலைய SHO-வான கரம்வீரை இது தொடர்பாக தொடர்பு கொண்டு நியூஸ்செக்கர் சார்பில் பேசியபோது, அவரும் வைரலாகும் வீடியோ செய்தி போலியானது என்று உறுதி செய்தார். குறிப்பிட்ட உணவகத்தில் சாக்கடை நீர் மூலமாக பிரியாணி தயாரிக்கப்படவில்லை; பாத்திரங்களும் கழுவப்படவில்லை. கழிவுநீர் வெளியேற்றமே செய்யப்படுகிறது என்று விளக்கமளித்தார். “உண்மையில் குறிப்பிட்ட உணவகம் குறித்த புகார்கள் என்னவென்றால் கழிவுநீரை சாலையில் வெளியேற்றுவதன் மூலமாக சுற்றுச்சூழலை மாசு படுத்துகிறார்கள் என்பதே. எனவே, உணவகத்தினருக்கு சம்மன் அனுப்பி கழிவுநீரை கழிவுநீர் தொட்டி மூலமாக வெளியேற்ற அறிவுரை கூறியுள்ளோம். ” என்று விளக்கமளித்தார்.
தொடர்ந்த நம்முடைய தேடலில் கடந்த ஆகஸ்ட் 16, 2023 அன்று வெளியாகியிருந்த பேஸ்புக் வீடியோ ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில் எந்த இடத்திலும் குறிப்பிட்ட உணவகத்தில் சாக்கடை நீர் மூலமாக பிரியாணி சமைக்கப்படுவதாக தகவல் இடம்பெற்றிருக்கவில்லை.
சாலையில் கழிவுநீரை வெளியேற்றும் உணவகம் என்பதே அதில் பிரச்சினை என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், ஷாமா தாபா உணவக உரிமையாளர் இதுகுறித்து மக்களிடம் மன்னிப்பு கோரி, மாற்றுவழிகளை கண்டறிவதாகவும் உறுதியளித்துள்ளார். எனவே, இஸ்லாமியர் ஒருவர் சாக்கடை நீரில் பிரியாணி தயாரிப்பதாகப் பரவும் தகவல் போலியானது என்று அறிய முடிகிறது.
Also Read: சுதந்திர தின பாதுகாப்பு பணியில் பெண் ராணுவ வீரர் என்று பரவும் 2019ஆம் ஆண்டு புகைப்படம்!
Conclusion
இஸ்லாமியர் ஒருவர் ஹரியானாவில் சாக்கடை நீரில் பிரியாணி செய்து விற்பனை செய்வதாகப் பரவும் வீடியோ தகவல் ஒரு வதந்தி என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Conversation with inspector Karamveer, Pinjore police station
Conversation with Yaseen Rizvi, Shama Biryani Dhaba
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)