வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact CheckReligionமக்காவில் பனிப்பொழிவு என்று பரவும் பொய்யான வீடியோ தகவல்!

மக்காவில் பனிப்பொழிவு என்று பரவும் பொய்யான வீடியோ தகவல்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

மக்காவில் பனிப்பொழிவு என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Screenshot from Facebook/ hmmferose.hajiyar

இஸ்லாமியர்களின் புனிதத்தலைமையிடமாக விளங்கும் மக்கா மாகாணத்தில் அமைந்துள்ளது அவர்களுடைய புனிதப் பள்ளிவாசல்.

இந்நிலையில், ”உலக வரலாற்றில் முதல்முறையாக புனித மக்காவில் பனி பெய்யும் காட்சி” என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Screenshot from Facebook/ hmmferose.hajiyar
Screenshot From Facebook/SAAD TV
Screenshot from Facebook/Thouheedjamath

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பிரதமர் மோடி தாயின் அஸ்தியை கரைத்ததாக பரவும் பழைய வீடியோ!

Fact Check/Verification

மக்காவில் பனிப்பொழிவு என்பதாக வீடியோ தகவல் வைரலானதைத் தொடர்ந்து அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

’மக்கா பனிப்பொழிவு’ என்கிற கீவேர்ட் மூலமாகத் தேடியபோது Haramain Sharifain என்கிற மக்காவைச் சேர்ந்த செய்தியகம் ஒன்றின் ட்வீட் நமக்குக் கிடைத்தது. ஜனவரி 01, 2023 அன்று பதிவிடப்பட்டுள்ள இந்த ட்விட்டர் பதிவில், ”மக்காவில் பனிப்பொழிவு என்று பரவுகின்ற வீடியோ தவறானது; தேசிய வானிலை மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது” என்பதாகப் பதிவிட்டுள்ளனர். சவுதி அரேபியா கெசட் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவும் இதையே உறுதி செய்கிறது.

A VIDEO CLIP RECENTLY CIRCULATED ON THE SOCIAL MEDIA PURPORTEDLY SHOWING SNOWFALL IN MASJID AL HARAM, #MAKKAH IS FAKE, THE NATIONAL METEOROLOGICAL CENTER SAID IN A STATEMENT ON SUNDAY. PIC.TWITTER.COM/RCOHBB4LSW— Haramain Sharifain (@hsharifain) January 1, 2023

Facebook Link

இதன் அடிப்படையில், நாம் மேலும் கீவேர்ட் சர்ச் முறையில் தேடியபோது @ArabianWeatherSA என்னும் சவுதி அரேபிய பருவநிலை ஆய்வு நிறுவனத்தின் ட்வீட் ஒன்று நமக்குக் கிடைத்தது.

அதன்படி, “குறிப்பிட்ட வீடியோ எடிட் செய்யப்பட்டது” என்றும், மக்காவில் ஜனவரி 01, 2023 அன்று “வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாக இருந்தது” என்றும் அரபு மொழியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்காவின் இரண்டு புனித பள்ளிவாசல்களின் பிரதிநியாக செயல்படும் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கமான Emirate of Makkah province ட்விட்டர் பக்கமும் குறிப்பிட்ட வீடியோ போலியாக உருவாக்கப்பட்டது என்று விளக்கமளித்துள்ளது.

பல்வேறு செய்தி ஊடகங்களும் இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது என்று விளக்கமளித்துள்ளன. அவற்றின் இணைப்புகள் இங்கே, இங்கே மற்றும் இங்கே இணைத்துள்ளோம். இதன் உண்மையறியும் சோதனையை ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளோம்.

Also Read: மதுபோதையில் அத்துமீறிய அண்ணாமலை என்று புதியதலைமுறை மற்றும் தினமலர் தரப்பில் நியூஸ்கார்ட் வெளியிடப்பட்டதா?

Conclusion

மக்காவில் பனிப்பொழிவு என்பதாக சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்ற வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Media

Sources
Tweet by Haramain Sharifain, January 1, 2023
Tweet by @Saudi_Gazette, January 1, 2023
Tweet by @ArabiaWeatherSA, January 1, 2023
Tweet by @makkahregion, January 1, 2023
(This fact check was first done in Newschecker Urdu by Mohammed Zakariya)


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular