சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024
சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

HomeFact Checkராஜஸ்தானில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா?

ராஜஸ்தானில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனையா?

உரிமை கோரல் 

சிக்கனை விஞ்சும் லோகஸ்ட் 65. ராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளி பிரியாணி விற்பனை. புரதச்சத்து மிகுந்துள்ளதால் அதிக வரவேற்பு!

சரிபார்ப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் நுழைந்த பாலைவன வெட்டுக்கிளிகளின் கூட்டம் பயிர்களை நாசப்படுத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், அந்த வெட்டுக்கிளிகளைப் பிரியாணி செய்து ராஜஸ்தான் உணவகங்களில் விற்பனை செய்வதாகச் செய்தித்தாளில் வெளியான பகுதி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.facebook.com/photo.php?fbid=10222453272260525&set=a.1708231785551&type=3

உண்மை தன்மை :

ராஜஸ்தானில் உள்ள உணவகங்களில் ” வெட்டுக்கிளி பிரியாணி ” செய்வதாகப் பரவும் தகவல் குறித்துத் தேடிய பொழுது சில இணையதளங்களில் வெட்டுக்கிளி தொடர்பான சில செய்திகள் கிடைத்தன .பிற செய்தி ஊடகங்கள் இதைப் பற்றிய செய்தியை வெளியிடவில்லை .

https://tamil.asianetnews.com/life-style/locust-65-out-of-trouble-locust-biryani-sale-in-india-qb3cgu

https://tamil.samayam.com/latest-news/india-news/rajasthan-hotels-started-selling-locust-biryani-and-such-dishes-they-say-specific-dish-is-high-with-protein/articleshow/76078785.cms

https://m.dinakaran.com/article/News_Detail/589512/amp

மேலும் “Rajasthan locust briyani ” எனும் கீ வார்த்தைகளைக் கொண்டு தேடிய பொழுது ராஜஸ்தானில் இதுபோன்ற எந்த செய்தியும் கிடைக்கவில்லை .மாறாக ,பாக்கிஸ்தான் நாட்டின் சிந்து மாகாண பகுதியில் வெட்டுக்கிளி பிரியாணி செய்வதாக 2020 பிப்ரவரி மாதம் english.newstracklive.com எனும் இணையதளத்தில் வெளியான செய்தி கிடைத்தது. 

https://english.newstracklive.com/news/pak-is-made-of-locusts-tasting-biryani-mc24-nu-1069331-1.html

2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தானைச் சேர்ந்த “Thenews “என்னும் இணையதளத்தில் ,பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தர்பர்க்கர் பகுதியைச் சேர்ந்தவர்கள் உணவகங்களில் வெட்டுக்கிளிகள் மூலம் பிரியாணி உள்ளிட்ட உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்வதாக வெளியாகி இருக்கிறது.

https://www.thenews.com.pk/latest/534298-thar-residents-relish-in-locust-biryani-curry-dishes

2019 நவம்பர் 12-ம் தேதி ஏஎன்ஐ செய்தியில், ” கராச்சி மக்கள் வெட்டுக்கிளிகளை வைத்து பிரியாணி செய்யுமாறு சிந்து மாகாண அமைச்சர் பரிந்துரை செய்ததாக ” வெளியாகி இருக்கிறது. அந்த செய்தியிலும், சிந்து மாகாணத்தில் உள்ள தார் சாச்சாரோ பகுதியில் உள்ள உணவகத்தில் வெட்டுக்கிளி பிரியாணி மற்றும் அதன் மூலம் செய்யப்பட்ட உணவுகளை விற்பனை செய்வதாக இடம்பெற்று இருக்கிறது.

https://www.aninews.in/news/world/asia/unable-to-tackle-locust-swarms-sindh-minister-suggests-karachiites-to-make-biryani-of-insects20191112015847/

முடிவுரை

எண்களின் ஆராய்ச்சிக்குப் பின்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் வெட்டுக்கிளி பிரியாணி செய்வதாக வெளியான செய்தி தவறானது .வைரல் செய்யப்பட்ட புகைப்படம் பாக்கிஸ்தான் நாட்டில் இருந்து வெளியானவை மற்றும் 2019-யில் இருந்து சிந்து பகுதியில் உள்ள உணவகத்தில் வெட்டுக்கிளி பிரியாணி மற்றும் பிற உணவுகளும் விற்பனை செய்யப்படுகிறது என அறிய முடிகிறது.

Sources

  • Google Search
  • Twitter 
  • Facebook
  • News paper

Result: False

(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Most Popular