Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: திமுக எம்பி ஆ.ராசாவின் கோவை வீட்டை இடிக்க நீதிமன்றம் உத்தரவு
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் புகைப்படம் ராஷ்ட்ரீய ஜனதாதள் முன்னாள் எம்எல்ஏ சையது அபு தோஜ்னாவின் வீடாகும்.
திமுக எம்பி ஆ.ராசாவின் கோயம்புத்தூர் வீடு என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“திமுக MP ஆ. ராசாவின் கோயம்புத்தூர் அரண்மனை வீட்டை இடித்து தள்ள நீதிமன்றம் உத்தரவு..! விழி பிதிங்கி நிற்கிறார் ஆ. ராசா..! இறைவனை பழிப்பவனுக்கு இதைவிட அதிக தண்டனை வந்து சேரும்..!” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சென்னை மழையில் வலம் வரும் முதலை என்று பரவும் தவறான பழைய புகைப்படம்!
திமுக எம்பி ஆ.ராசாவின் கோயம்புத்தூர் வீடு என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது ”Land-for-jobs ‘scam’: ED raids Delhi residences of Tejashwi, his sisters” என்று The tribune வெளியிட்டிருந்த செய்தியில் இப்புகைப்படம் கடந்த மார்ச் 10ஆம் தேதியன்று “Mediapersons outside the residence of former RJD MLA Abu Dojana in Patna ” என்கிற குறிப்புடன் இடம்பெற்றிருந்தது.
மேலும், New Indian express, PTI, Telegraph india உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களிலும் இந்த வீடு முன்னாள் ராஷ்ட்ரீய ஜனதாதள் எம்எல்ஏ சையது அபு தோஜ்னாவின் வீடு என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஆ.ராசாவின் கோவை வீட்டினை இடிக்க நீதிமன்றம் உத்தரவு என்பதாக செய்தி ஏதேனும் வந்துள்ளதா என்று நாம் ஆராய்ந்தபோது சமீபத்தில் அத்தகைய செய்தி எதுவும் வெளியாகியிருக்கவில்லை என்பதும் நமக்கு உறுதியாகியது.
ஆனால், கடந்த அக்டோபர் 10, 2023 அன்று மத்திய அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள X பதிவில், “ED has taken possession of 15 immovable properties owned by A. Raja, former Union Cabinet Minister of Environment and Forest in the name of his Benami Company M/s Kovai Shelters Promoters India Pvt Ltd, under the provisions of PMLA, 2002 in the matter of disproportionate assets case of A. Raja, subsequent to confirmation of the Provisional Attachment order.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் ஆ.ராசாவின் பினாமி பெயரில் வாங்கப்பட்ட 55 கோடி மதிப்புள்ள 42 ஏக்கர் நிலம் உட்பட 15 சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், எங்கும் அவருடைய வீட்டினை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் இடம்பெறவில்லை. இதுதொடர்பான செய்திகளை இங்கே, இங்கே, இங்கே , இங்கே மற்றும் இங்கே படியுங்கள்.
Also Read: சென்னை இரயில் நிலையத்தில் படகு செல்வதாக பரவும் மும்பை படம்!
திமுக எம்பி ஆ.ராசாவின் கோவை வீடு என்று பரவும் புகைப்படம் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from The Tribune India, Dated March 10, 2023
X Post From, @dir_ed, Dated October 10, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)