திங்கட்கிழமை, ஜூலை 8, 2024
திங்கட்கிழமை, ஜூலை 8, 2024

HomeFact Checkஇந்தியாவிலிருக்கும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றதற்காக வருத்தமுற்றார்களா?

இந்தியாவிலிருக்கும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றதற்காக வருத்தமுற்றார்களா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: இந்தியாவிலிருக்கும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றதற்காக வருத்தமுற்றார்கள்.

Fact: வைரலாகும் வீடியோ பங்களாதேசத்தில் எடுக்கப்பட்டதாகும். பங்களாதேசம் தென் ஆப்பிரிக்காவுடன் தோற்றதாலேயே அவர்கள் வருத்தமுற்றார்கள்.

“ரோஹிங்கியா முஸ்லீம்களைப் பாருங்கள்… இந்தியாவிற்கு அகதியாக வந்து இந்திய சாப்பாட்டை சாப்பிடுகிறார்கள்… ஆனால் இந்தியா வெற்றியடைந்தால் அழுகிறார்கள்…” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்தியாவிலிருக்கும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றதற்காக வருத்தமுற்றதாக பரவும் வீடியோத்தகவல்

X Link | Archive Link

இந்தியாவிலிருக்கும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றதற்காக வருத்தமுற்றதாக பரவும் வீடியோத்தகவல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாமகவிற்கு அதிமுக தொண்டன் ஒருபோதும் ஓட்டு போட மாட்டான் என்றாரா சி.வி.சண்முகம்?

Fact Check/Verification

இந்தியாவிலிருக்கும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றதற்காக வருத்தமுற்றதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலில் @iSoumikSaheb என்ற பயனர் ஐடியை கொண்ட எக்ஸ் பக்கத்தில் பங்களாதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையே நடந்த போட்டியில் கடைசி கட்டத்தில் பங்களாதேசம் தோல்வியுற்றதால் பங்களாதேசம் ரசிகள் சோகமடைந்ததாக கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. இவ்வீடியோவானது ஜூன் 17, 2024 அன்று பதிவிடப்பட்டிருந்தது.

இவ்வீடியோவை வைராலாகும் வீடியோவுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இவ்விரு வீடியோக்களும் ஒரே தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் என்று அறிய முடிந்தது. வைரலாகும் வீடியோவில் காணப்பட்ட நபர்கள் மேற்காணும் வீடியோவிலும் இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிந்தது.

@iSoumikSaheb பயனர் ஐடியில் பகிரப்பட்ட வீடியோவில் ‘Sadik Jomadder Rifat’ எனும் வாட்டர்மார்க் இடம்பெற்றிருந்ததை தொடர்ந்து அதுக்குறித்து ஆராய்ந்தோம். அதில் Sadik Jomadder Rifat என்ற பயனர் ஐடியை கொண்ட ஃபேஸ்புக் பக்கத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையே நடந்த போட்டியில் தோல்வியுற்றதால் பங்களாதேசம் ரசிகர்கள் சோகமுற்றதாக மேற்காணும் வீடியோ பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது. இவ்வீடியோவானது ஜூன் 11, 2024 அன்று பதிவிடப்பட்டிருந்தது.

இந்தியாவிலிருக்கும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றதற்காக வருத்தமுற்றதாக பரவும் வீடியோத்தகவல்

கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகுவது யாதெனில்,

  1. வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வானது ஜூன் 11அல்லது அதற்கு முன்னர் நடந்திருக்க வேண்டும். ஆனால் டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி ஜூன் 29, 2024 அன்றே நடந்தது. ஆகவே இதன்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவானது கண்டிப்பாக இந்தியா கோப்பை வென்ற தருணத்தில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகின்றது.
  • வைரலாகும் வீடியோவில் காணப்படுபவர்கள் பங்களாதேசம் தோற்றதற்கே வருத்தமுற்றுள்ளார்கள்; இந்தியா வெற்றிப்பெற்றதற்காக அல்ல.
  • வைரலாகும் வீடியோவில் காணப்படுபவர்கள் பங்களாதேசத்தை சார்ந்தவர்கள்; இந்தியாவில் இருக்கும் ரோஹிங்கா முஸ்லீம்கள் அல்ல.

Also Read: பாகிஸ்தான் கிரிக்கெட் ஜெர்ஸி அணிந்து காசர்கோடு முஸ்லீம் லீக் அலுவலகம் திறக்கப்பட்டதா?

Conclusion

இந்தியாவிலிருக்கும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்றதற்காக வருத்தமுற்றதாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook post from the user, Sadik Jomadder Rifat, Dated June 11, 2024
X post from the user, @iSoumikSaheb, Dated June 17, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular