Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: முகமது பினிதாவை பாலத்தின் அடியில் வீசுவதற்காக சுமந்து சென்றான்
Fact: வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது உண்மையில் பொம்மையாகும்.
முகமது என்கிற நபர் மனைவியைக் கொன்று சாக்கில் கட்டி எடுத்துச் சென்றதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
“இந்த இந்து பெண் பினிதா ராஜஸ்தானை சேர்ந்தவர். பழ வியாபாரியான முகமதுவைக் காதலித்து, வீட்டை விட்டு ஓடிப்போனவள், 22 நாட்களுக்குப் பிறகு அவள் சாக்கு மூட்டையில் காணப்பட்டாள், முகமது, பினிதாவை பாலத்தின் அடியில் வீசுவதற்காகச் சுமந்து சென்றான். அவள் கால்கள் சாக்குப் பையில் இருந்து நழுவியது கூட முகம்மதுக்குத் தெரியாது. பின்னால் ஒரு கார் வந்து, இந்தப் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு போலீஸை அழைத்தது. நீங்கள் அனைவரும் உங்கள் மகளை நன்றாக கவனிக்கவும்” என்கிற பதிவுடன் இப்புகைப்படம் பரவி வருகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: Fact Check: முகமது ஷெரீப் அகமது என்ற பெயர் கொண்ட ஒடிசா ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் தலைமறைவா?
முகமது என்கிற நபர் மனைவியைக் கொன்று சாக்கில் கட்டி எடுத்துச் சென்றதாக பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரல் பதிவில் உள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது நமக்கு கடந்த ஜூன் 2ஆம் தேதியன்று Cairo 24 என்கிற இணையதளத்தில் வெளியாகியிருந்த இப்புகைப்படம் கிடைத்தது. அதிலிருந்து வைரலாகும் புகைப்படம் எகிப்தின் தலைநகரம் கைரோவில் எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்தது.
குறிப்பிட்ட கட்டுரையில் அப்புகைப்படம் குறித்து விளக்கத்தில், கடைகளில் உபயோகிக்கப்படும் பொம்மையை கைரோவில் எடுத்துச் சென்ற ஒருவரின் புகைப்படம் இது என்றும், யாரோ இதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
Alarabiya என்னும் செய்தி ஊடகமும் இதுகுறித்த கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில், இதே விளக்கம் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

நம்முடைய தொடர் தேடுதலில், கடந்த ஜூன் 1ஆம் தேதியன்று வெளியான ஃபேஸ்புக் பதிவு ஒன்று கிடைத்தது. முகமது நசர் என்கிற நபர் அப்பதிவில், புகைப்படத்தில் பொம்மையை எடுத்துச் செல்லும் நபர் தானேதான் என்றும், தன் மீது தவறாக உயிரிழந்த உடலை எடுத்துச் சென்றதாக செய்தி பரவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்பதிவில், மேலும் தன்னுடைய மொபைல் எண், அவர் பொம்மையை சென்று சேர்த்த கடையின் விவரத்தையும் தெரிவித்துள்ளார். Samah emad என்கிற பெண் ஒருவரின் வீடியோ ஒன்றிலும் இதுகுறித்த விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பொம்மையை எடுத்துச் சென்ற நபரின் புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். மேலும், முகமது பொம்மையை டெலிவரி செய்த BG collections பக்கத்திலும் இதுகுறித்த விளக்கம் தெளிவாக பதிவிடப்பட்டுள்ளது.
முகமது என்கிற நபர் மனைவியைக் கொன்று சாக்கில் கட்டி எடுத்துச் சென்றதாக பரவும் புகைப்படத்தில் இருப்பது உண்மையில் ஜவுளிக்கடைகளில் உபயோகிக்கப்படும் பொம்மை என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Reports of Cairo24, published on June 2, 2023
Report of Alarabiya, published on May 31, 2023
Facebook posts of Mohammed Nasr and Samah Emad
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
October 27, 2025
Ramkumar Kaliamurthy
July 5, 2024
Ramkumar Kaliamurthy
February 19, 2024