Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
அமெரிக்க கலவரத்தில் காவி கொடியேந்தி இந்தியர் ஒருவர் பங்கேற்றதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அமெரிக்காவில் அண்மையில் அதிபருக்கான தேர்தல் நடைப்பெற்றது. இதில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை வீழ்த்தி ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
ஆனால் ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் இத்தேர்தலில் தான் தோல்வியுறவில்லை என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வந்தார்.
இந்நிலையில் கடந்த புதன் கிழமையன்று கடந்த அமெரிக்க நாடாளுமன்றமான கேப்பிட்டல் ஹில் கட்டிடத்தில் அதிபர் தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்கான கூட்டம் நடைப்பெற்றது.
இச்சமயத்தில் டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டிடத்துக்குள் அத்து மீறி புகுந்து மாபெரும் கலவரத்தை ஏற்படுத்தினர். இக்கலவரத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிகழ்வானது உலகம் முழுவதும் மிகப்பெரிய செய்தி பொருளாக உள்ளது. இந்நிலையில் இந்தக் கலவரத்தில் இந்தியர் ஒருவர் காவி கொடியுடன் கலந்துக் கொண்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
அமெரிக்க கலவரத்தில் காவி கொடியேந்தி இந்தியர் ஒருவர் பங்கேற்றதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம்.
அவ்வாறு ஆய்வு செய்ததில் சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படமானது பழைய புகைப்படம் எனும் உண்மையை நம்மால் அறிய முடிந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அயோத்யாவில் புதிதாக கட்டவிருக்கும் ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அவர்களின் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வை உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்த இந்தியர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியர்கள் வாஷிங்டனில் இருக்கும் கேப்பிட்டல் ஹில் கட்டிடத்தின் அருகே காவி கொடியை ஏந்தி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுக்குறித்த செய்தியானது தி எக்னாமிக்ஸ் டைம் உள்ளிட்ட பத்திரிக்கைகளில் வெளிவந்திருந்தது.
இச்சமயத்தில் எடுக்கப்பட்டப் புகைப்படத்தையே தற்போது அமெரிக்க கலவரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் அமெரிக்க கலவரத்தில் காவி கொடியேந்தி இந்தியர் ஒருவர் பங்கேற்றதாக பரப்பப்படும் புகைப்படம் பழைய புகைப்படம் என்பதையும், அது அயோத்தியில் ராமர் கோவிலில் அடிக்கல் நாட்டிய தினத்தில் எடுக்கப்பட்டப் புகைப்படம் என்பதையும் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Facebook Profile: https://www.facebook.com/asathali.asath/posts/1872570186214361
Twitter Profile: https://twitter.com/KadalTamilvanan/status/1347253168464281601
Twitter Profile: https://twitter.com/vasantalic/status/1347217871663861766
The Economic Times: https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/people-across-the-world-celebrate-the-historic-ayodhya-bhoomi-pujan/celebrations-in-washington/slideshow/77387151.cms
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)