சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 27, 2024

HomeFact Checkராமர் கோவில் திறப்பிற்குப் பின்னரே சிறுமிகள் வன்கொடுமை அதிகம் நடப்பதாக மதுரை ஆதினம் கூறினாரா?

ராமர் கோவில் திறப்பிற்குப் பின்னரே சிறுமிகள் வன்கொடுமை அதிகம் நடப்பதாக மதுரை ஆதினம் கூறினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ராமர் கோவில் திறப்பிற்குப் பின்னரே நாட்டில் ரயில் விபத்துகள், சிறுமிகள் வன்கொடுமை அதிகம் நடக்கின்றன என்று மதுரை ஆதினம் கூறியதாக பரவும் நியூஸ்கார்டு.

Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியானதாகும். புதிய தலைமுறை இதை தெளிவு செய்துள்ளது.

ராமர் கோயில் திறப்பிற்குப் பின்னரே நாட்டில் ரயில் விபத்துகள், சிறுமிகள் வன்கொடுமை என கொடும் நிகழ்வுகள் அதிகம் நடக்கின்றன என்று மதுரை ஆதினம் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

ராமர் கோவில் திறப்பிற்குப் பின்னரே நாட்டில் ரயில் விபத்துகள், சிறுமிகள் வன்கொடுமை அதிகம் நடக்கின்றன என்று மதுரை ஆதினம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

X Link | Archive Link

ராமர் கோவில் திறப்பிற்குப் பின்னரே நாட்டில் ரயில் விபத்துகள், சிறுமிகள் வன்கொடுமை அதிகம் நடக்கின்றன என்று மதுரை ஆதினம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

Archive Link

ராமர் கோவில் திறப்பிற்குப் பின்னரே நாட்டில் ரயில் விபத்துகள், சிறுமிகள் வன்கொடுமை அதிகம் நடக்கின்றன என்று மதுரை ஆதினம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு காரணமானவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டாரா?

Fact Check/Verification

ராமர் கோவில் திறப்பிற்குப் பின்னரே நாட்டில் ரயில் விபத்துகள், சிறுமிகள் வன்கொடுமை அதிகம் நடக்கின்றன என்று மதுரை ஆதினம் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

முன்னதாக மதுரை ஆதினம் மேற்காணும் கருத்தை தெரிவித்தாரா என தேடியதில், அவர் இவ்வாறு பேசியதாக பதிவுகளோ, ஊடகச் செய்திகளோ எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.

மாறாக ராமர் கோவிலுக்கு ஆதரவாக அவர் பேசிய வீடியோ ஒன்றை காண முடிந்தது.

மேலும் பிரதமர் மோடியால்தான் ராமர் கோவில் கட்டப்பட்டது என்று அவர் பேசிய வீடியோ ஒன்றையும் காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் கடந்த வாரம் புதன் கிழமை (பிப்ரவரி 28) பத்திரிக்கைகளுக்கு அவர் அளித்த பேட்டியில் மோடிதான் அடுத்த பிரதமராக வருவார், அவருக்குதான் தன் ஆதரவு என்று பேசி இருப்பதையும் காண முடிந்தது.

மேற்கிடைத்த இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு எதிராக மதுரை ஆதினம் மேற்கண்ட கருத்தை பேசி இருக்க வாய்ப்பில்லை என உணர முடிந்தது.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கவில்லை  என அறிய முடிந்தது.

இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, அக்கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை என அவர் உறுதி செய்தார்

இதனையடுத்து தேடுகையில் ‘இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை’ என்று குறிப்பிட்டு வைரலாகும் இச்செய்தி குறித்து புதிய தலைமுறை அதன அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் மறுப்பு தெரிவித்திருந்ததை காண முடிந்தது.

ராமர் கோவில் திறப்பிற்குப் பின்னரே நாட்டில் ரயில் விபத்துகள், சிறுமிகள் வன்கொடுமை அதிகம் நடக்கின்றன என்று மதுரை ஆதினம் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

Also Read: இந்தியா கூட்டணியின் பாட்னா பேரணி என்று பரவும் 2017ஆம் ஆண்டு புகைப்படம்!

Conclusion

ராமர் கோவில் திறப்பிற்குப் பின்னரே நாட்டில் ரயில் விபத்துகள், சிறுமிகள் வன்கொடுமை அதிகம் நடக்கின்றன என்று மதுரை ஆதினம் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Youtube Video from Thanthi TV, Dated Jan 22, 2024
Youtube Video from IBC Tamil, Dated December 31, 2023
Youtube Video from News Tamil, Dated February 28, 2024
News Report from Puthiya Thalaimurai, Dated March 07, 2024
Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular