பெரம்பலூர் மாவட்டத்தில் டைனோசர் முட்டைக் கிடைத்ததாக ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது.

Fact check/Verification:
பெரம்பலூர் – அரியலூர் சாலையில் அமைந்துள்ளது குன்னம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள குளம் ஒன்றில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் முட்டைகளின் படிமங்கள் கிடைத்தததாக பாலிமர் நியூஸ், நியூஸ் 7, சத்தியம், தந்தி டிவி, IBC தமிழ் உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வந்துள்ளது
இச்செய்தியானது இணையத்தளவாசிகளுக்கு மிகப்பெரியத் தீனியாக அமைந்து விட்டது. இச்செய்தியை அடிப்படையாக வைத்து பல மீம்கள் இணையத்தில் சுற்றி வருகின்றன.
அவைகளில் சில உங்கள் பார்வைக்கு:
ஊடகங்களில் வெளிவந்துள்ள இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்த அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் இச்செய்திக் குறித்து ஆராய்ந்தோம்.
உண்மை என்ன?
வைரலான இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து ஆராய்ந்ததில், இச்செய்தியானது உண்மையில் தவறானது என்ற உண்மை நமக்கு தெரிய வந்தது.
உண்மையில் பெரம்பலூரில் கண்டெடுக்கப்பட்டவை டைனோசர் முட்டைகள் இல்லை. பழங்காலத்தில் வாழ்ந்த கடல் உயிரினங்களின் படிமங்கள் மேல் அம்மோனியேட் எனும் வேதிப்பொருள் மூடியதாலேயே இந்த உருண்டை வடிவ ராட்சசப் பாறை உருவாகியுள்ளது.
இதுக்குறித்த விரிவான செய்திக் குறிப்பு புதிய தலைமுறையில் வெளிவந்துள்ளது.
அச்செய்தி உங்களுக்காக.
Conclusion
நம் விரிவான ஆய்வுக்குப்பின் தெளிவாகுவது என்னவென்றால், பெரம்பலூர் மாவட்டத்தில் கிடைத்த இராட்சசப் பாறைகள் உண்மையில் டைனோசர் முட்டைகள் இல்லை. அவைகள் அம்மோனியேட் பாறைகள் ஆகும்.
Result: Misleading
Our Sources
Polimer News: https://www.youtube.com/watch?v=4GpPf-NbZKs
News 7: https://twitter.com/news7tamil/status/1319175567833354243
Puthiya Thalaimurai: https://www.youtube.com/watch?v=HbtKtaXAxvg
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)